இரத்த சோகையை கட்டுப்படுத்தும் சூப்பர் உணவுகள்

Loading...

இரத்த சோகையை கட்டுப்படுத்தும் சூப்பர் உணவுகள்உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும் போது இரத்த சோகை ஏற்படுகிறது. உணவில் சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லாதது, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்களால் இந்நோய் ஏற்படுகிறது. எனவே சரியான உணவுகளை எடுத்துக் கொண்டு இரத்த சோகையிலிருந்து விடுபடுவது அவசியம்.

சாியான உணவு வகைகள் பின்வருமாறுகைக்குத்தல் அரிசி

கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்த சோகை உள்ளவர்கள் இந்த சாதத்தை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.ஓட்ஸ்

ஓட்ஸில் எண்ணற்ற சத்துக்களுடன், இரும்புச்சத்து உள்ளதால் காலை உணவாக ஓட்ஸை எடுத்து வருவதால் இரத்த சோகையை கட்டுப்படுத்தலாம்.உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இதை தினமும் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் இரத்த சோகையிலிருந்து விடுபடலாம்.ப்ராக்கோலி

ப்ராக்கோலியை இரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.பட்டாணி

பட்டாணியும், இரத்த சோகையைப் போக்க சிறந்த மருந்து. எனவே பச்சை பட்டாணி வாங்கி, அதனை சமைத்து சாப்பிட்டு வாருங்கள்.பரங்கிக்காய் விதை

பரங்கிக்காய் விதையை வறுத்து, அதனை உண்ணும் உணவில் தூவி, சாப்பிட்டு வந்தால் இரத்த சோகையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply