இயற்கையான பச்சை காய்கறிகளின் ஜுஸ்களிலுள்ள பயன்கள்

Loading...

இயற்கையான பச்சை காய்கறிகளின் ஜுஸ்களிலுள்ள பயன்கள்

கற்றாழை சாறு

கற்றாழை சாறு உடலுக்கு அதிக அளவு ஆரோக்கியத்தையும், பல நன்மைகளையும் வழங்குகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் சிறந்த ஏஜென்ட். மேலும் இது உடலை சுத்தப்படுத்தி, உடலின் வேலைகளை துரிதப்படுத்துகிறது. கற்றாழை சாறு ஒரு சிறந்த நீரேற்றியாக செயல்படுகிறது. இந்த சாறு, கற்றாழை செடியில் உள்ளே உள்ள ஜெல்லில் இருந்து தயாரிக்கப்படுகிறது.வெள்ளரி மற்றும் கீரை

இந்த சாற்றில் ஒரு கப் கலவையான கீரை மற்றும் நறுக்கிய வெள்ளரித் துண்டுகள் முதலியவை கலந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சிறிதளவு உப்பு,மிளகுத் தூள் மற்றும் இலவங்கப்பட்டை போன்றவை சுவைக்காக சேர்க்கப்படுகிறது. இந்த கலவையில் சிறிதளவு நீர் சேர்க்கப்படுகிறது. வெள்ளரிக்காய் உடலை நன்கு சுத்தப்படுத்துகிறது.மேலும் இதில் அதிக அளவு புரதம் அடங்கி உள்ளது. கீரையில் புரதம், சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. எனவே இந்த சாறு, அதிக அளவு ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் உடலுக்கு வழங்குகிறது.புதினா மற்றும் எலுமிச்சை

புதினா புத்துணர்வையும், புத்தெழுச்சியையும் வழங்குகிறது. புதினாவுடனான எலுமிச்சைசாறு, உங்களுக்கு சுறுசுறுப்பை வழங்குகிறது. இது உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கி, சிறந்த நீரேற்றியாகவும் செயல் படுகிறது. இது உடலுக்கு சிறந்த நீரேற்றியாக செயல்படுவதால், உடலுக்கு உடனடியாக அதிக ஆற்றலை வழங்குகிறது. புதினா இலைகளை அரைத்து மாவு போல செய்து, அதில் எலுமிச்சை, உப்பு, சர்க்கரை மற்றும் இலவங்கப்பட்டை போன்றவற்றை சேர்த்து இந்த சாற்றை தயாரிக்க வேண்டும். இந்த சாறு, ஆரோக்கியமானது மற்றும் தயாரிப்பதற்கும் எளிதானது.கிரீன் கார்டன் ஜூஸ்

இந்த சாறு தயாரிப்பதற்கு, நான்கு பரட்டை கீரை இலைகள், ஒரு கப் நறுக்கிய வெள்ளரிக்காய், ஒரு கப் கீரை இலைகள், செலரி மற்றும் வேர் கோஸ் இலைகள் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அனைத்துப் பொருட்களையும் கலந்து, அதில் சிறிது நீர் மேலும் சுவைக்காக சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் போன்றவற்றை சேர்க்க வேண்டும்.

இந்த சாறில் சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால், இது அதிக அளவு ஆற்றலை வழங்கும் நீர்மமாகும். இது காலையில் குடிப்பதற்கு சிறந்த நீர்மமாகும். இயற்கையாக பச்சை காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த சாறு, மிகவும் அதிக அளவு ஆற்றலை வழங்கும் சாறுகளில் ஒன்றாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply