இந்த ஆண்டோடு மறைந்த மாபெரும் தொழில்நுட்ப சேவைகள்

Loading...

இந்த ஆண்டோடு மறைந்த மாபெரும் தொழில்நுட்ப சேவைகள்20ஆம் நூற்றாண்டு ஆரம்பித்த முதலேயே பல தொழில்நுட்பங்கள் நமது பூமியில் வேரூன்றிவிட்டன. வெளியான போது அந்த தொழில்நுட்பங்கள் மாஸ் ஹிட்டடித்தாலும் ஆண்டுகள் செல்ல செல்ல பழைய தொழில்நுட்பமாய் மாறிவிடுகிறது. இதனால் அந்த தொழில்நுட்பங்களை மீண்டும் ஒரு தொழில்நுட்பம் சரிகட்டி, ஓரங்கட்டி சரிவுகளில் தள்ளி விடுகிறது.

இந்த 2014ஆம் ஆண்டில் பற்பல தொழில்நுட்பங்கள் வெளியானாலும் அதற்கான ஊன்று கோலாக இருந்தது என்னவோ பழைய தொழில்நுட்பங்கள்தான் !

அப்படி பழைய தொழில்நுட்பங்களாய் மாறி போய் இந்த 2014ஆம் ஆண்டில் இறந்துவிட்ட டாப் 3 தொழில்நுட்பங்களின் தொகுப்புதான் இவை..

1. ஆர்குட்
2. வின்டோஸ் எக்ஸ் பி (XP)
3. எம் எஸ் என் மெசஞ்சர்


ஆர்குட்:

உலகளவில் சமூக வலைத்தளங்களில் முதன்மையான ஆர்குட் சேவை கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் நிறுத்தியது கூகுள் நிறுவனம். இந்த ஆர்குட் சமூகவலைத்தளம் 2004ஆம் ஆரம்பிக்கப்பட்டது. இதே ஆண்டில் தான் ஃபேஸ்புக்கும் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஃபேஸ்புக் தற்போது உலகளவில் 128 கோடி பயனாளர்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.


வின்டோஸ் XP:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தூக்கி நிறுத்திய கண்டுபிடிப்பு இது. கடந்த 13 ஆண்டுகளாக எல்லா கணினிகளிலும் இடம் பிடித்துள்ளது. இன்றளவும் கூட அனைத்து அலுவலகங்களிலும் இந்த இயங்குதளம் தான் பயன்பட்டு வருகிறது. இச்சேவையை கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தியது மைக்ரோசாப்ட் நிறுவனம்.


எம் எஸ் என் மெசஞ்சர்:

உலகின் முதன்மையான சாட் மற்றும் உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்ய பயன்பட்ட சேவை இது. 15 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது இச்சேவை. கடந்த 2005 ஆம் ஆண்டு வின்டோஸ் லைவ் மெசஞ்சர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்கைப் சேவையுடன் இச்சேவையை இணைத்தது மைக்ரோசாப்ட் நிறுவனம். ஒவ்வொரு மாதமும் 3 கோடிக்கு அதிகமான புது வாடிக்கையாளர்களை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி இந்த வருடத்தோடு பல தொழில்நுட்ப சேவைகள் மறைந்தாலும் பல பல புது தொழில்நுட்பங்கள் வந்த வண்ணம்தான் உள்ளன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply