இதுரையில் இல்லாதவாறு நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்ட மனித முளையம் – விஞ்ஞானிகள் சாதனை

Loading...

இதுரையில் இல்லாதவாறு நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்ட மனித முளையம் – விஞ்ஞானிகள் சாதனைமுதன்முறையாக இரு குழுக்கள் கொண்ட ஆராய்ச்சியாளர்களால் கிட்டத்தட்ட13 நாட்களாக மனித முளையம் பரிசோதனை அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.


இது முன்னையதிலும் இருமடங்கு காலப்பகுதியாகும்.


முன்னெப்போது மில்லாதவாறு இம்முறை கரு வளர்ச்சியினை அவர்களால் அவதானிக்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


ஆனாலும் சட்டரீதியாக மனித முளையமானது 14 நாட்களுக்கு மேலாக ஆய்வுகூடத்தில் வைத்திருக்க முடியாத காரணத்தினால் மேலதிக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இயலவில்லை.


முன்னாதாக மனித முளையமானது 5 – 7 நாட்கள் வரையிலான காலப்பகுதிகளே ஆய்வுகூடங்களில் கருவறையில் பதிக்கப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட முடிந்தது.


ஆய்வுகூடத்தில் கருவறை வடிவிலான வளர்ப்பூடகங்களில் முளைய வளர்ச்சிக்குத் தேவையான ஊக்கிகள், போசணைப் பதார்த்தங்கள் வழங்கப்பட்ட நிலையிலேயே பாதுகாக்கப்பட்டது.


இதனால் கரு அவ் வளப்பூடகத்தில் பதிந்து வளரக்கூடிய நிலை காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


மனித முளையமானது ஒரு தாயின் துணையின்றி கருவறைக்கு வெளியே தானாக ஒழுங்கமைந்து, அதன் பாகங்கள் விருத்தியடைந்தமை விஞ்ஞான உலகில் ஆச்சர்யமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply