இதய குழாய் அடைப்பை சரிசெய்ய வாங்க சாப்பிடுவம்

Loading...

இதய குழாய் அடைப்பை சரிசெய்ய வாங்க சாப்பிடுவம்
தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய்யைத்தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும்.தேங்காய் எண்ணெய் 85 சதவீதம் பூரிதமான கொழுப்புச்சத்து கொண்டது. தேங்காயில் உள்ள கொழுப்பு அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக்கரைக்கிறது. தினமும் 2 முதல் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்வது இதயத்திற்கு மிகவும் நல்லது.


காபி :

காபியில் உள்ள ‘கேஃபஸ்டால்’ கெட்ட கொழுப்பை அதிகரிக்கச்செய்கிறது. இதனால், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ‘அல்சர்’ மற்றும் ‘இதய நோய்’ உள்ளவர்கள், காபி அருந்துவதை நிறுத்திவிடுவது நல்லது.

அதேசமயம், காபி சில நோய்களுக்குத்தடுப்பு மருந்தாகவும் இருக்கிறது என்பது உண்மை. இதில் உள்ள சில வேதிப்பொருட்கள் ‘பார்கின்சன்’ நோய் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் வருவதைத்தடுக்கின்றன. இன்சுலின் சுரக்கச்செய்வதால், காபி குடிப்பவர்களுக்கு இரண்டாம் வகை டயாபடீஸ் வராமல் தடுக்கலாம்.


ஆரஞ்சு ஜூஸ் :

ஆரஞ்சுப்பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன.

ஆரஞ்சுப்பழம் சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். ஆரஞ்சுப்பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்தானது அதிகம் நிறைந்திருப்பதால் அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.

மேலும் உடலில் எப்போது பொட்டாசியம் சத்துக்குறைகிறதோ அப்போது தான் இதயத்தில் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவே, தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது நல்லது.


கிரீன் டீ :

ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது. இதய நோய் வராமல் தடுக்கிறது.


மாதுளம் பழம் :

மதுளையில் சுண்ணாம்பு சத்து, தாது உப்புக்கள், இரும்புச்சத்து என நோயை எதிர்க்கும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.

அடிக்கடி மாதுளம் பழத்தைச்சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உண்டாகும். தினமும் மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள், இதய பலகீனம் நிவர்த்தியாகும். இனிப்பு மாதுளம் பழத்தைச்சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது.


கீரைகள் :

கீரைகள் தினமும் எடுத்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்.

பெண்களுக்கு 100 கிராம் ஒரு நாளைக்கு, ஆண்களுக்கு 40 கிராம் ஒரு நாளைக்கு, பள்ளி செல்லும் சிறு பிள்ளைகளுக்கு (4-6 வயது) 50 கிராம் ஒரு நாளைக்கு, 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம் ஒரு நாளைக்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


மஞ்சள் :

மஞ்சள் பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது. வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் போக்குகிறது.

ரத்தத்தை சுத்தப்படுத்தும், குடற்பூச்சிகளைக்கொல்லும். நீரிழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக்குறைத்திடும். சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தி மஞ்சளுக்கு அதிகம் உண்டு.

மஞ்சளின் சத்து எண்ணெய் உட்கொண்டால் கல்லீரலில் பித்தநீர் சுரப்பதையும் கட்டியாவதையும் குணப்படுத்திவிடும். மணத்தக்காளி கீரையோடு, பூண்டு 4 பல், நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply