ஆண்களே 20 நிமிடத்தில் அழகாக மாற வேண்டுமா

Loading...

ஆண்களே 20 நிமிடத்தில் அழகாக மாற வேண்டுமாபெண்களை விட ஆண்களுக்குத்தான் வெளியில் அலைச்சல் அதிகம். அதிலும் மார்கெட்டிங் வேலைக்கு செல்பவர்களுக்கு முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கவேண்டியது அவசியம். ஆனால் வெயில் காலத்தில் ஒருமுறை வெளியில் சென்று வந்தாலே முகம் கருத்துவிடும். எனவே முக அழகை புத்துணர்ச்சியோடு பாதுகாக்க வீட்டிலேயே பேஸ் மாஸ்க் போட்டுக்கொள்ளலாம்.வெள்ளரிக்காய் மாஸ்க் :

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப்பொருளாகவும் பயன்படுகிறது. இது முகத்தை இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது.

வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது. புத்துணர்ச்சியோடு இருக்கும்.

வெள்ளரிக்காயை தயிருடன் கலந்தும் மாஸ்க் போடலாம்.தேன், முட்டை :

தேன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது. ஆப்பிள் சருமத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குகிறது. ஒரு ஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம்.

15 முதல் 20 நிமிடம் வரை இந்த கலவையை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.தக்காளி பழ மாஸ்க் :

ஒரு சில ஆண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும். அவர்களுக்கு தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப்பொருளாக விளங்குகிறது. நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு அப்ளை செய்யவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும்.வேப்பிலை மாஸ்க் :

வேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற மருந்துப்பொருளாகும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். வேப்பிலையை பறித்து வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

காலையில் அந்த இலையை மைய அரைத்துக்கொண்டு அதனுடன் சில துளிகள் பால் விட்டு பேஸ்ட் போல செய்யவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும். ஆண்களுக்கு ஏற்ற அசத்தலான செலவில்லாத பேஸ் மாஸ்க் இது வாரத்திற்கு இரண்டு முறை உபயோகிக்கலாம். வெயில் காலத்திற்கு ஏற்றது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply