ஆண்களே வாங்க நீங்களும் ஜொலி ஜொலிக்கலாம்

Loading...

ஆண்களே வாங்க நீங்களும் ஜொலி ஜொலிக்கலாம்பெண்களை போன்று ஆண்களும் தங்களது முக அழகு, ஆடை அழகு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். ஆண்களுக்கு இளம் வயதில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை முகப்பரு சில நாட்கள் இருந்தாலும் அதன் வடு மாறாது. இதற்க்கு சரியான தீர்வு சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவிவரவும்.

முகம் வரட்சியினை போக்க கொத்துமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம் ஒருமுறை பூசி வரலாம். ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தாலும் முக வரட்சி மாறும். வெயிலில் செல்லும்போது, சன் ஸ்கிரீன் அடங்கிய ஃபேர்னெஸ் க்ரீம்(Fairness Cream) பயன்படுத்தலாம். இதைக் கை கால்களுக்கும் தடவ வேண்டும். கை மற்றும் கால்களில் நகங்களை ஒட்ட வெட்டி சுத்தமாக வைத்திருப்பதே ஆண்களுக்கு அழகு.


ஆடை அலங்காரம்

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆண்கள் ஆடைகளைத் தெரிவு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும். நண்பர்களுடம் போவதாக இருந்தால் சாதரண உடையே போதுமானது. நெருங்கிய உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு போகும் போது சேர்வானி டிரேஸ் நன்றாக இருக்கும்.

சின்ன நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் அணிந்துகொண்டு அதற்குப் பொருத்தமாக வெள்ளை குர்தா அணிந்தால் பார்ப்பதற்க அழகாக இருக்கும். ஆடைகள் வாங்கும் போழுது வெள்ளை, கறுப்பு, க்ரே, வெளிறியபிங்க், வெளிறியளிர்நீலம், வெளிறிய மஞ்சள், போன்ற நிறங்கள் நன்றாக இருக்கும்.

வெளி அழகு 50% , உள் அழகு 50% இருந்தால் தான், நீங்கள் அழகாக தெரிவீர்கள். இனிமையாக பேசி, சிரித்தமுகத்துடன் இருந்தால் இன்னும் அழகாக தெரிவீர்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply