ஆண்களே எப்போதும் இளமையாக காட்சியளிக்க வேண்டுமா

Loading...

ஆண்களே எப்போதும் இளமையாக காட்சியளிக்க வேண்டுமாஆரோக்கியமற்ற அவசர உலகில் இன்றைய தலைமுறையினர் இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெறுகின்றனர். இதற்கு பழக்கவழக்கங்களும், உணவுகளும் தான் முக்கிய காரணம். இவற்றில் மாற்றத்தைக் கொண்டு வந்தால், இளமைத் தோற்றத்தை முதுமையானாலும் தக்க வைக்கலாம்.

அதுமட்டுமின்றி, பழக்கவழக்கங்கள் மற்றும் உணவுகளோடு, மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக சருமத்திற்கு போதிய பராமரிப்பை வழங்க வேண்டும். எனவே 30 வயதானாலும் இளமையுடன் ஜொலிக்க ஒருசில டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வெண்ணெய் மற்றும் தேன் :

1 டேபிள் ஸ்பூன் வெண்ணெயுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் சருமமானது வெண்ணெயில் உள்ள சத்துக்களை உறிஞ்சி, சருமத்தின் இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்கும்.


ஆப்பிள் :

ஆப்பிளை அரைத்து, அதனை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி சில வாரங்கள் செய்து வந்தால், நல்ல கொழுகொழு கன்னங்களைப் பெற்று, சருமத்தின் இளமைத்தன்மையைப் பாதுகாக்கலாம்.


ஆலிவ் ஆயில் :

தினமும் இரவில் படுக்கும் முன் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முதுமையிலும் சருமம் இளமையோடு காட்சியளிக்கும்.


எலுமிச்சை சாறு மற்றும் பழத் துண்டுகள் :

ஒரு பௌலில் 3 துண்டுகள் ஆப்பிளுடன், 2 துண்டுகள் கேரட் சேர்த்து, அதில் 1/2 கப் எலுமிச்சை சாறு சேர்த்து உட்கொண்டு வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், இளமையுடன் காணலாம்.


தயிர் :

தயிரைக் கொண்டு தினமும் முகத்தை 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், கன்னங்கள் பெரிதாவதுடன், இளமையும் பாதுகாக்கப்படும்.


கற்றாழை ஜெல் :

கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து உலர வைத்து வந்தால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை நீங்கி, முகம் பொலிவோடு இளமையாக காட்சியளிக்கும்.


பப்பாளி மற்றும் தேன் :

நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து உலர வைத்து கழுவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.


மில்க் க்ரீம் :

தினமும் இரவில் படுக்கும் முன் மில்க் க்ரீம்மை முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து வர, கன்னங்கள் கொழுகொழுவென்று ஆகி, சருமத்தின் இளமையும் பாதுகாக்கப்படும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply