ஆண்களும் அழகும்

Loading...

ஆண்களும் அழகும்பெண்களை விட ஆண்கள் அழகின் மேல் அதிக கவனம் செலுத்துவதில்லை. ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முக அழகுக்கு கொடுப்பதில்லை.

அப்படி உங்களுக்கு அழகு நிலையம் செல்ல நேரமில்லை என்றால், வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிமையான அழகு குறிப்புகள் இதோ,முக அழகு

வெளியில் அலைந்துவிட்டு வரும் ஆண்கள் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும், இல்லையென்றால் ஐஸ் கட்டியினை ஒரு துணியில் போட்டு முகத்தில் ஓத்தடம் கொடுக்கவும்.

இதனால் முகம் தெளிவடையும். இதனை தினமும் செய்யுங்கள்.

சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும் அவர்கள்,முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதில் பாலாடையும், பன்னீரையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு இளஞ்சூடான வெந்நீரில் அலசினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும். இதனை மாதம் 2 முறை செய்யவும்.

முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.உதடு

சில ஆண்கள் சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும்.தலைமுடி

தலைமுடி நன்றாக கருகருவென்று வளர்வதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்னெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் சமமாக எடுத்து தலைக்கு தேய்த்து ஊரிய பின்பு குளிக்க வேண்டும்.பற்கள்

எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply