ஆண்களின் முடி கொட்டுதலைத் தடுக்க எளிமையான டிப்ஸ்

Loading...

ஆண்களின் முடி கொட்டுதலைத் தடுக்க எளிமையான டிப்ஸ்சிக்குப்பிடித்த முடி, உடைகின்ற முடி, முடி வளராமை, முடி உதிர்தல், இளநரை, அதிகமான எண்ணெய் பசை உள்ள தலை ஆகியவை ஆண்களிடம் அதிகமாகக் காணப்படும் பிரச்சனைகளாகும். பெண்களைப் போல ஆண்களும் தமது தலைமுடியைக் கவனத்துடன் பராமரித்து வந்தால் தான், அவர்களது தலைமுடியும் வளர ஏதுவாக இருக்கும்.

சுற்றுப்புறச் சூழல் மாசடைந்துள்ள இக்காலத்தில் தூசுகளால் தலையானது எளிதில் அழுக்கடைகிறது. ஹெல்மெட் அணிந்து கொண்டு இருப்பதால், அதிக வியர்வை மற்றும் வெப்பம் ஆகியவற்றால் தலைமுடியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனவே இம்மாதிரியான சூழ்நிலைகளில் தலைமுடியினைப் பராமரித்து, ஆரோக்கியமான அழகான தலைமுடியினைப் பெறுவதற்கு சில வீட்டுக் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


கற்றாழை :

தலைமுடிக்கு வலிமையும் பளபளப்பும் பெற கற்றாழையை பயன்படுத்தலாம். அதற்கு கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் போன்ற பசையை ஸ்கால்ப்பில் அழுத்தித் தேய்த்துக் கழுவ வேண்டும். இவ்வாறு கற்றாழை ஜெல் கொண்டு வாரம் இருமுறை தலையினை மசாஜ் செய்தால், முடி உதிர்வதைத் தடுக்கலாம்.


வெந்தயம் :

2 அல்லது 3 மேசைக்கரண்டி வெந்தயத்தைத் தண்ணீரில், 8- 10 மணி நேரம் ஊற வைத்து, அதனை பசை போல அரைத்து தலையில் தடவ வேண்டும். இதனால் வெந்தயமானது தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, பொடுகுத் தொல்லையிலிருந்தும் பாதுகாக்கும்.


ஆரஞ்சு பழத் தோல் :

ஆரஞ்சு பழத்தோல்களை மிக்ஸியில் போட்டு அரைத்து, தலைமுடியில் வாரமொருமுறை தடவிக் குளித்தால், பொடுகும் தொல்லை நீங்கும்.


எண்ணெய் மசாஜ் :

எண்ணெயைக் கொண்டு தலைக்கு மசாஜ் செய்வதால், தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களானது கிடைக்கும். அத்தகைய எண்ணெய் மசாஜ் செய்வதற்கு பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவை மிகவும் ஏற்றவை. அதிலும் வாரம் இருமுறையாவது எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும்.


மருதாணி இலை :

வலிமையான தலைமுடி வேண்டுமெனில், மருதாணி இலைகளை நன்கு அரைத்து தலையில் தடவி, மூன்று மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் நன்கு அலச வேண்டும். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.


வினிகர் :

வினிகரில் பொட்டாசியமும், நொதிகளும் அதிகம் உள்ளதால், தலையில் உள்ள பொடுகை நீக்க இது பெரிதும் உதவுகிறது. அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரைக் கொண்டு, தலையில் தேய்த்து 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.


தேங்காய்ப் பால் :

தேங்காய்ப் பால் தலைமுடியில் ஏற்படும் வறட்சியை தடுத்து மென்மையாக்குகிறது. மேலும் முடி வளரவும் உதவுகிறது. எனவே தலைக்கு தேங்காய்ப் பால் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.


முட்டை :

தலைமுடிப் பராமரிப்பிற்கு புரதம் மிக அவசியம். தலைமுடி வலிமையுடனும், அடர்த்தியாகவும் திகழ வேண்டுமெனில், வாரத்திற்கு 3 அல்லது 4 முறை புரதப் பராமரிப்பு செய்ய வேண்டும். புரதப் பராமரிப்பு என்பது முட்டையை உடைத்து ஒரு கோப்பையில் ஊற்றி, நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். பின் அதனை தலையில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீர் கொண்டு தலையினை நன்கு அலச வேண்டும்.


தேன் :

பளபளப்பான கேசத்திற்கு தேனை பயன்படுத்தலாம். தேனும், ஆலிவ் எண்ணெயும் கலந்து தலைமுடியில் தேய்த்து, அரை மணிநேரத்திற்குப் பிறகு நன்கு அலசி குளிக்கவும்.


வேப்பிலை :

வேப்பிலையை அரைத்து பசை போலாக்கி, அதனைத் தலையில் தடவி குளித்தால், ஸ்கால்ப்பில் அல்கலைன் தன்மையை நிலைநிறுத்த முடியும். மேலும் இது முடி உதிர்வதையும் தடுக்கிறது. இன்னும் சிறந்த பலனைப் பெறுவதற்கு, வேப்பிலைப் பசையுடன், சிறிது தேனும், ஆலிவ் எண்ணெயும் சேர்த்துக் கொள்ளலாம்.


தயிரும் மிளகும் :

பொடுகுத் தொல்லையை போக்க மூன்று ஸ்பூன் தயிருடன், 2 தேக்கரண்டி கருப்பு மிளகுத்தூள் கலந்து, அக்கலவையை, தலையில் அழுத்தித் தேய்க்கவும். ஒரு மணிநேரத்திற்கு பிறகு மென்மையான ஷாம்பு தேய்த்து நன்கு அலச வேண்டும்.


அவகேடோ :

வெண்ணெய் பழம் என்று தமிழில் அழைக்கப்படும் அவகேடோவை வாழைப்பழத்துடன் சேர்த்து பசை போல அரைத்துக் கொண்டு, இப்பசையை தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அரைமணிநேரத்திற்குப் பிறகு, இளஞ்சூடான நீரை கொண்டு தலையினை அலச வேண்டும். இதனால் தலைமுடி வலுவுடனும், அடர்த்தியாகவும், அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.


ஆளி விதைகள் (Flax Seed) :

2 அல்லது 3 மேசைக்கண்டி ஆளிவிதைகளை எடுத்துக் கொண்டு, தண்ணீரில் 5 நாட்களுக்கு ஊற விடுங்கள். நன்றாக ஊறிய பிறகு அது பசை போல் ஆகிவிடும். அதனை பஞ்சு உருண்டைகள் கொண்டு தலையில் அழுத்தித் தடவுங்கள். 30 நிமிடங்கள் கழித்து, வெந்நீரில் தலையை நன்கு அலச வேண்டும்.


எலுமிச்சைச் சாறு :

எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை 1: 2 விகிதத்தில் கலந்து கொண்டு. பின் இதனை மயிர்க்கால்களில் படும் வண்ணம் அழுத்தித் தேய்க்க வேண்டும். 3-4 மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் நன்கு அலச வேண்டும்.


முட்டை மற்றும் மயோனைஸ் :

இத்தகைய கலவையானது, தலைமுடியை பளபளப்பாகவும், பட்டுப்போல் மிருதுவாகவும் திகழ உதவும். அதற்கு இந்த கலவையை தலைமுடியில் தேய்த்து, அரை மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.


தேங்காய் எண்ணெய் + செம்பருத்தி + கறிவேப்பிலை :

தேங்காய் எண்ணெய், செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இரவு தூங்கும் போது தலையில் தடவி, காலையில் நீரில் நன்கு அலசினால், வலிமையான தலைமுடியைப் பெறலாம். இதனை வாரமொரு முறை செய்யலாம்.


நெல்லிக்காய் :

நெல்லிக்காய், சீகைக்காய், கரிசலாங்கண்ணி மற்றும் பூந்திக்கொட்டை ஆகியவற்றைக் காய வைத்துப் பொடியாக்கி, அவற்றில் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் திகழும்.


சமையல் சோடா :

தலையிலிருந்து பொடுகுகளை அகற்ற சமையல் சோடா பெரிதுவும் உதவியாக இருக்கும். அதற்கு கையளவு ஷாம்புவில், ஒரு மேசைக்கரண்டி சமையல் சோடா சேர்த்து கலந்து குளித்து வந்தால், பொடுகு இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போகும்.


மயோனைஸ் :

வறண்ட தலைமுடியில் மயோனைஸை தடவி, தலையினை ஒரு பிளாஸ்டிக் உறை கொண்டு மூடி, அரை மணிநேரத்திற்கு பிறகு நன்கு அலசி விட வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply