அழிந்து போன பைல்களை மீட்டெடுக்க உதவும் இலவச மென்பொருள்

Loading...

அழிந்து போன பைல்களை மீட்டெடுக்க உதவும் இலவச மென்பொருள்R-Linux Recovery எனப்படும் மென்பொருள் மிக துல்லியமான வகையில் அழித்த கோப்புகளை மீட்டு எடுக்க உதவுகிறது.

இந்த மென்பொருள் Hard Disk மட்டுமின்றி பென் டிரைவ் மற்றும் மெமரி கார்ட்களிலும், செயல்படக்கூடியது.

நீங்கள் தெரியாமல் அழித்து விட்டாலோ, Format செய்து விட்டாலோ, அல்லது வைரஸ் அழித்து விட்டாலோ இதைக் கொண்டு கோப்புகளை மீட்கலாம்.

இது மட்டுமின்றி உங்கள் ஹார்ட் டிஸ்கை ஒரு இமேஜ் கோப்பாக சேமித்து வைக்கும் வசதியும் உண்டு. இதை வைத்தும் நீங்கள் பின்னாளில் உங்கள் கோப்புகளை மீட்கலாம்.

Hard Disk இல் ஒரு தகவல்களை பதியும் போது அவை குறிப்பிட்ட செக்டார் களில் (Sector) பதியப்படுகின்றன. நீங்கள் ஒரு கோப்பை நிரந்தரமாக அழித்து விட்டாலும் அவை அந்த குறிப்பிட்ட செக்டார்களில் தான் இருக்கும்.

அடுத்து வேறு ஏதேனும் கோப்புகள் அந்த செக்டார்களில் பதியப்படும் வரை அவை அதே இடத்தில தான் இருக்கும். அதனால் உங்களுக்கு அழித்த கோப்புகள் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கிடைக்க வில்லை எனில் வேறு கோப்புகள் அந்த இடத்தில் பதியப்பட்டுவிட்டன என்று அர்த்தம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply