அழகைத்தக்க வைக்க வேண்டுமா

Loading...

அழகைத்தக்க வைக்க வேண்டுமாபெண்கள் பெரும்பாலும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காக நிறைய முயற்சிகள் கூட எடுப்பார்கள். சில நேரங்களில் அந்த முயற்சிகள் பலனளிப்பதிலை. இதற்கு காரணம் செயற்கை முறையில் உருவான பொருட்கள் தான். முடிந்த வரை இயற்கை முறைகள் அழகை பெற முயல்வோம். இதற்கான சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும்.

அதிக குளிரூட்டிய பானங்கள், உணவுப் பொருட்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

மென்மையான உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும். பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் .

தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சோப்புகளை அடிக்கடி மாற்றக் கூடாது. இவை உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும்.

கோபம், மன அழுத்தம் இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். யோகா தியானம் செய்தால் உடலின் இரத்த ஓட்டம் சீராகி அனைத்து உறுப்புகளும் பலம் பெறும். இதனால் தோல் பளபளப்பதுடன், உடல்வலிமையும் அதிகரிக்கும்.

Loading...
Rates : 0
VTST BN