அழகான கழுத்திற்கு

Loading...

அழகான கழுத்திற்குஒவ்வொரு முறையும் நாம் கண்ணாடி பார்க்கும்போது பெரும்பாலும் கவனிக்காமல் விடும் பகுதி கழுத்துதான். சங்கோடும், அன்னப் பறவையோடும் ஒப்பிடப்படும் கழுத்து பெண்களின் அழகிற்கு மேலும் மெருகூட்டுகிறது.

தங்கள் முக அழகைச் சிரத்தையோடு பராமரிக்கும் பெண்கள் அதே அளவிலான அக்கறையைக் கழுத்தினைப் பராமரிக்கக் காட்டுவதில்லை. ஆனால் முகத்தைப் போலவே கழுத்தையும் பராமரிப்பது மிக அவசியமானது.

பல பெண்களுக்கு அழகான வளவளப்பான முகம் இருக்கும். ஆனால் கழுத்து மட்டும் சுருக்கங்களோடு சொரசொரப்பானதாக இருக்கும். முகத்தை அழகாகப் பராமரிக்க முடியும்போது கழுத்தைப் பராமரிப்பதும் சாத்தியம் தான். இதை ஒரு சின்ன விஷயமாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உங்கள் தோற்றத்தில் பெரிய மாற்றத்தை உண்டாக்கக் கூடும்.

மென்மையான கழுத்துப் பகுதியை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால் தோலின் தன்மை மிருதுவான தன்மையை இழக்கும். சுருக்கங்களோடு முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொடுக்கும்.

எப்பொழுதெல்லாம் முகத்தைக் கழுவுகிறீர்களோ அப்பொழுது கழுத்தையும் சுத்தப்படுத்துங்கள். சுத்தப்படுத்தும் க்ரீம்களாலேயே மசாஜ் செய்யுங்கள். காட்டனால் துடைத்தெடுங்கள். இப்பொழுது உங்கள் பேஷ் வாஷ் க்ரீம்களால் முகத்தையும் கழுத்தையும் கழுவுங்கள். பிறகு ஒரு மாய்ச்சரைசிங் க்ரீமால் மசாஜ் செய்யுங்கள்.

மருத்துவ ரீதியான பிரச்சினைகளும் கழுத்து கருப்பாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம். வழக்கமான இந்தப் பராமரிப்பு முறைகள் எதுவும் இதற்கு உதவாது. எனவே தோல் சிகிச்சை நிபுணரைப் பார்க்கலாம். கழுத்தின் பின் பகுதிக்கும் இந்தப் பராமரிப்பு முறைகள் மிக அவசியம்.

நீங்கள் பேஷியல் செய்வதற்காக ப்யூட்டி பார்லர்களுக்குப் போனால் கழுத்து, முகம் இரண்டிற்கும் பேஷியல் செய்யச் சொல்லுங்கள். ப்ளீச்சீங் செய்யும் ப்யூட்டீசியன் பொதுவாக முகம் மட்டுமா கழுத்திற்குமா என்று கேட்பார். நீங்கள் கழுத்து முகம் இரண்டிற்கும் ஓ.கே. சொல்லுங்கள். அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

இயற்கை மூலிகைகளைக் கொண்டு செய்யும் ப்ளீச்சிங் மற்றும் பேஷியலுமே சிறந்தவை. அதுதான் முகத்தையும் தோலின் தன்மையும் நல்ல முறையில் பாதுகாக்கும். பேஷியலோடு மசாஜ் செய்யும்போது கழுத்துப் பகுதியிலுள்ள தோலை மென்மையாக்குவதோடு இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

வீட்டிலிருக்கும் போது முகத்தில் பேஸ் பேக் அணிவதை விரும்பினால் அதையே கழுத்திற்கும் சேர்த்துச் செய்யுங்கள். கழுத்திற்குப் போடுவது கொஞ்சம் சிரமம் தான். யாரையாவது அப்ளை பண்ணச் சொல்லலாம். 15 நிமிடங்களுக்குப் பிறகு அதனைக் கழுவுங்கள். ஒவ்வொருவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகிய கழுத்தை நீங்கள் பெறுவதற்கு இவை தான் எளிய வழிகள்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply