அரைநெல்லிக்காய் சாதம்

Loading...

அரைநெல்லிக்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 2 கப்
அரை நெல்லிக்காய் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 10
தேங்காய் துருவல் – 2 டீ ஸ்பூன்
பெருங்காயம் – 1 டீ ஸ்பூன்
கடுகு, உளுந்து, மஞ்சள்தூள் – தலா 1/2 டீ ஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கு



செய்முறை:

* அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள்.

* நெல்லிக்காய்களை சுத்தம் செய்து கொட்டைகளை நீக்குங்கள்.

* 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து வதக்குங்கள்.

* பிறகு நெல்லிக்காய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி நைசாக அரைத்தெடுங்கள்.

* மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பலை, ஆகியவற்றை தாளியுங்கள்.

* சாதத்தில் நெல்லிக்காய் விழுது, கடுகு ஆகியவற்றை சேர்த்து கிளறுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply