அரசமரத்தின் மருத்துவ பயன்கள்

Loading...

அரசமரத்தின் மருத்துவ பயன்கள்அரசமரத்தின் இலை கொழுந்தை அரைத்து மோருடன் கரைந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.

அரச இலை, மாவிலை, நாவல் இலை, அத்தி இலை இவற்றைச் சம பங்கு எடுத்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்துவர பெண்களுக்க மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.

அரச மரத்தின் பழுப்பு இலைகளை எரித்துத் தூளாக்கி, தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் தீப்புண், அதனால் ஏற்பட்ட தழும்புகள் குணமாகும்.

அரசம்பட்டையை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.

இதன் பட்டையை வறுத்துத் தீய்ந்த பின்னர் தூளாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூசிவர ஆறாத புண், சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

இதன் பட்டையை இடித்துப் பொடியாக்கி 200 மில்லி லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தூளைப் போட்டு காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை சேர்த்துக் குடித்துவர இருமல் தணியும்.

அரசம்பட்டைத் தூளில் 10-15 கிராம் எடுத்துக் கொண்டு, அதைத் தண்ணீரில் கலந்து காய்ச்சிக் குடித்துவர சொறி, சிரங்குகள் குணமாகும்.

அரசமரக் குச்சியைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீரில் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதில் தேன் சேர்த்துக் குடிக்க பித்தம் தணியும்.

கலப்பட குங்குமம் இடுவதால் நெற்றியில் தோல் நீல நிறமாக மாறுவதுடன் அந்த இடத்தில் அரிப்பும் ஏற்படும். இதற்கு அரச மரத்தின் பட்டையை நீரில் கரைத்து. பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் போட்டு வந்தால், பாதிப்பினால் ஏற்பட்ட நீல நிறம் மாறி, பழைய ஒரிஜனல் நிறம் கிடைக்கும்.

அரச மரத்தைக் குத்துவதால் வடியும் பாலைக் காலில் உள்ள பித்த வெடிப்புகள் மீது தொடர்ந்து தடவி வந்தால் அது விரைவில் குணமாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply