அதிக தண்ணீர் குடித்தால் எடை குறையுமா

Loading...

அதிக தண்ணீர் குடித்தால் எடை குறையுமாஅதிகளவு தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும் என்பது உண்மையா? எப்படி? 80 கிலோ எடையுள்ள ஒருவர், ஒரு நாளைக்கு 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படிக் குடித்தால் அந்தளவு அடிக்கடி சிறுநீரும் வெளியேறுமே… இதனால் சிறுநீரகம் பாதிக்கப் படாதா? சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்தனின் பதில்… அதிகளவு தண்ணீர் குடிப்பதால் எடை குறைந்து விடாது.

நிறைய தண்ணீரும் குடித்துக் கொண்டு, கூடவே அரிசி உணவைக் குறைத்து, காய்கறி, பழங்களை அதிகம் எடுத்துக்கொண்டு, கலோரி குறைவான உணவு களை சாப்பிட்டு வந்தால் எடை குறையலாம்.

பொதுவாக வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். வியர்வை வழியே உடலின் நீர் வெளியேறுவதால், அதை ஈடுகட்ட, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். வெயில் இல்லாத மற்ற நாள்களில், வியர்வை அதிகமிருக்காது. உடலின் தண்ணீர் சத்திலும் இழப்பிருக்காது.

அதனால் அதிக தண்ணீர் குடித்தால், சிறுநீரின் அளவும் அதிகரிக்கும். அதிக தண்ணீர் குடிப்பது என்பது, ஆரோக்கியமான சிறுநீரகங்கள் மற்றும் இதயம் கொண்டவர்களுக்கு ஓ.கே. ஒன்றும் செய்யாது. சிறுநீரகம் பழுதடைந்திருந்தாலோ, சுவாசப் பிரச்னை இருந்தாலோ, கல்லீரல் அல்லது இதயக்கோளாறு இருந்தாலோ, அதிகளவு தண்ணீரானது உடலுக்குள்ளேயே தங்கி, வெளியேற்ற முடியாமல் போகும். அந்த நிலையை ‘ஃப்ளூயிட் ஓவர் லோடு’ என்கிறோம்.

சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் நாளொன்றுக்கு ஒன்றரை முதல் 2 லிட்டர் வரையிலும், இதயக் கோளாறு இருப்பவர்கள் 1 லிட்டரும் மட்டுமே தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படுவார்கள். எனவே அவர்கள் மட்டும் குடிக்கிற தண்ணீரின் அளவில் கவனம் செலுத்தினால் போதும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply