Polaroid அறிமுகப்படுத்தும் Android நிழற்படக் கம‌ரா

Loading...

Polaroid அறிமுகப்படுத்தும் Android நிழற்படக் கம‌ராAndroid இயங்குதளத்தில் செயற்படக்கூடிய நிழற்படக் கமெராக்களினை Samsung நிறுவனமானது அண்மையில் Galaxy Camera என்ற பெயரில் முதன் முறையாக அறிமுகப்படுத்தியிருந்தது.
இதற்கு அடுத்தபடியாக Polaroid நிறுவனமானது Android இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Polaroid IM1836 எனும் கமெராவினை அறிமுகப்படுத்தியுள்ளது.

18.1 Megapixel Sensor – இனை கொண்டதாகக் காணப்படும் இக்கமெராவானது 3.5 அங்குல அளவுடைய தொடுதிரை வசதியினையும் உள்ளடக்கியுள்ளது.

இவற்றுடன் வயர்லெஸ் தொழில்நுட்பமான Wi-Fi – இனையும் கொண்டுள்ள Polaroid IM1836 கமெராவானது, அடுத்தவருடம் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள புதுவரவு இலத்திரனியல் சாதனங்களை அறிமுகப்படுத்தும்(CES) நிகழ்வில் முதன்முறையாக விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply