De-fragment செய்வதால் ஆவது என்ன

Loading...

De-fragment  செய்வதால் ஆவது என்னநாம் ஒரு புறொக்கிறாமை உட்புகுத்தும் போது, அல்லது ஒரு பைலை சேமிகும் போது அவை நிரந்தரமாக ஹாட்டிஸ்கில் பதியப்பெறுகின்றது. ஆனால் அவை தொடற்சியாக அல்லது ஒரே ஒழுங்காக உடனடியாக பதியப்பெறுவதில்லை. கணினி நேரத்தை மீதிப்படுத்துவதற்காக வெற்றிடமாக உள்ள இடங்களில் எல்லாம் பதிந்து தொடர்பை வைத்துக் கொள்ளும். நாம் அவற்றைப் பாவிக்க கிளிக் செய்யும் போது அவற்றை நமக்கு பெற்றுத் தருவதற்காக பதிந்த இடங்களில் எல்லாம் அலைந்து திரிந்து அவற்றை எமக்கு எடுத்து வருகின்றது. அதனால் அதற்கு சிரமமும் நேரமும் எடுக்கின்றது. இதனால் கணினி தாமதமாக இயங்குவது போல் தோன்றுகின்றது.

Defragment செய்யும் போது அவை ஒரேசீராக தொடற்சியாக ஒழுங்காக பதியப் பெறுகின்றது. அதனால் திரும்பவும் பாவனைக்கு எடுத்து வரும் போது சிரமப்படாது உடனடியாக இயங்குகின்றது. De-fragment செய்வதற்கு நாம் முன்பு ஸ்கான் செய்ய Check Now என்ற பொத்தானை அழுத்தியது போல் இதற்கு Defragment Now என்ற பொத்தானை அழுத்துதல் வேண்டும். இதுவும் ஹாட் டிஸ்கின் நிலைமையைப் பொறுத்து நேரம் எடுத்துக் கொள்ளும். De-fragment மாதமொருமுறை செய்யவேண்டியதில்லை. சூழ்நிலைக்கேற்றவாறு 6 மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம். சில புதிய ஒப்பறேற்ரிங் சிஸ்ரம் Analyze செய்து (பரிசோதித்து) தற்போது அவசியமா? என்பதைக் கூறும். (Start–> Program–> Accessories –> System Tools–> Disk De-fragementer சென்றும் C Drive வை De-fragement செய்யலாம்).

Loading...
Rates : 0
VTST BN