3ஜி தொழில் நுட்பத்தில் புதிய ஐடியா ஸ்மார்ட்போன்

Loading...

3ஜி தொழில் நுட்பத்தில் புதிய ஐடியா ஸ்மார்ட்போன்ஐடியா நிறுவனம் புதிதாக ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அவ்ரஸ் என்ற ஸ்மார்ட்போன், மற்ற ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பான போட்டியை எற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் திரை வசதியில் சிறந்த தகவல்களை காட்டும். 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தில் தகவல்களை எளிதாக பெறலாம்.

இதில் ஆன்ட்ராய்டு 2.3 இஞ்ச் ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரில் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான வேகத்தில் செயல்படும்.

இன்னும் சொல்லப் போனால் இந்த ஸ்மார்ட்போன் 3ஜி வசதியினை வழங்குவது மட்டும் அல்லாமல் இது டியூவல் சிம் நெட்வொர்க் வசதியினையும சேர்த்து வழங்கும்.

இதில் 4 ஜிபி மெமரி வசதி மற்றும் 32 ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரியினையும் பெறலாம். 1,300 எம்ஏஎச் பேட்டரியினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 7,190 விலை கொண்டதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான தொழில் நுட்ப வசதியினை சுலபமாக கொடுக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply