20 சதவிகிதம் விலைகுறைக்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி டேப் 2

Loading...

20 சதவிகிதம் விலைகுறைக்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி டேப் 2இன்றைய நிலவரப்படி சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி டேப் 2வின் பதிப்பான 10.1னின் விலையை 20 சதவிகிதம் குறைதுள்ளதாகத் தெரிகிறது. சஹோளிக் என்ற இணைய விற்பனை நிறுவனம் இதை உறுதி செய்துள்ளது. சஹோளிக் பொறுத்தவரை சிலநாட்களுக்கு முன் ரூ.31,990க்கு விற்கப்பட்ட கேலக்ஸி டேப் 2வானது தற்பொழுது ரூ.25,990க்கு விற்கப்படுகிறது. நாளை இந்திய சந்தைகளில் வெளியாகப்போகும் ஐபேட் மினி மற்றும் ஐபேட் 4 ஆகிய இரண்டுமே சாம்சங்கின் இந்த திடீர் விலைகுறைப்புக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

ஐபேட் மினி, இந்தியாவில் ரூ.21,900க்கும் ஐபேட் 4 ரூ.31,900க்கும் விற்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அப்பிளின் இவ்விரண்டும் இந்திய சந்தையில் நல்ல விற்பனையேற்றம் பெறுமென சந்தயாளர்கள் கருதுகிறார்கள்.

கேலக்ஸி டேப் 2வின் 10.1 பொறுத்தவரை அதிநவீன நுடபக்கூறுகலையே கொண்டுள்ளன. அவை 10.1″ WXGA திரை, 3G, மைக்ரோ SD மற்றும் சிறந்த கேமராவைக்கொண்டுள்ளது.

ஆனால் ஆப்பிளுக்குப் போட்டியாக கேலக்ஸி டேப் 2, 10.1 இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply