லெனோவா களமிறக்கும் ஐடியாடேப் எ2107 டேப்லெட்

Loading...

லெனோவா களமிறக்கும் ஐடியாடேப் எ2107 டேப்லெட்லெனோவா நிறுவனம் ஐடியா டேப் எ2107 என்ற டேப்லெட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் அறிமுகம் செய்து வைத்தது. தற்போது இந்த டேப்லெட்டை லெனோவா விற்பனைக்கு களமிறக்கி இருக்கிறது.

லெனோவா ஐடியாடேப் எ2017 டேப்லெட் 149.99 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் அமெரிக்காவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் அடோரமா மற்றும் பி&எச் போட்டோ என்ற நிறுவனங்கள் இந்த டேப்லெட்டை விற்பனை செய்கிறது.

இந்த ஐடியாடேப் எ2107 டேப்லெட் பல சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக இந்த டேப்லெட்டில் 7 இன்ச் டிஸ்ப்ளே, 1.0 ஜிஹெர்ட்ஸ் கோர்ட்டக்ஸ் எ9 ப்ராசஸர், 512எம்பி ரேம், 8ஜிபி சேமிப்பு, மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட், வைபை, ப்ளூடூத் போன்ற வசதிகளைப் பார்க்கலாம். மேலும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வருவதால் பெரிய வரவேற்பைப் பெறும் என்று நம்பலாம்.

மேலும் இந்த டேப்லெட்டின் பேட்டரி 10 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் மலிவு விலை டேப்லெட்டை விரும்புபவர்கள் துணிந்து இந்த டேப்லெட்டை வாங்கலாம்.

Loading...
Rates : 0
VTST BN