நாள் ஒன்றில் நீங்கள் எவ்வளவு கதிர்வீச்சுக்கு ஆளாகுகின்றீர்கள் என்று தெரியுமா

Loading...

நாள் ஒன்றில் நீங்கள் எவ்வளவு கதிர்வீச்சுக்கு ஆளாகுகின்றீர்கள் என்று தெரியுமாகூடியளவு கதிர்வீச்சுக்கு ஆளாகும் போது அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. அது இறப்புக்கு கூட வழிவகுக்கக் கூடியது.

பல மக்கள் மத்தியில் இக் கதிர்வீச்சு தொடர்பாக தொடர்ச்சியான பயம் இருக்கத்தான் செய்கிறது.

உண்மையில் இக் கதிர்வீச்சு தொடர்பாக எச்சரிக்கையாக இருப்பதென்பது நல்லதொரு விடயம் தான். காரணம் அயனாக்கும் கதிர்வீச்சுக்கள் DND கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை.

ஆனாலும் நாம் ஒவ்வொருவரும் நாளுக்கு நாள் கதிர்வீச்சுக்கு உள்ளாகிறோம் என்பதைநம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இங்குள்ள அனிமேஷன் வீடியோவானது ஒவ்வொரு நாளும் நாம் கதிர்வீச்சுக்குள்ளாகும் வேறுபட்ட மூலப்பொருட்களை ஒப்பிட்டு காட்டுகிறது. அத்துடன் பல ஆச்சர்யமான விடயங்களும் இதில் அடங்கியுள்ளது.

உதாரணத்திற்கு, கிட்டத்தட்ட 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அணுமின் நிலையத்திலிருந்து குறைந்தளவு கதிர்வீச்சு கிடைக்கப்பெறுகிறது. இது ஒப்பீட்டளவில் விமான நிலைய ஸ்கேனரில் இருந்து வெளியேறும் கதிர்வீசலுக்கு சமமாகும்.

சிலர் X-ray படமெடுப்பு செயன்முறைகளின் போது வெளிப்படும் கதிர்வீச்சு தொடர்பாககவலைப்படுவதுண்டு. ஆனாலும் இது நாம் நாளாந்த வாழ்க்கையில் வெளிப்படுத்தப்படும்கதிர்வீச்சுக்களுடன் ஒப்பிடுகையில் பெரிய விடயமேயல்ல.

நாம் தொடர்ச்சியாக விண்வெளியிலிருந்து கதிர்வீச்சுக்களை உள்வாங்கிக் கொண்டிருக்கிறோம். நம்மை சூழவுள்ள காந்தப்புலமானது இவற்றில் பெரும்பாலானவற்றைவரவிடாது தடுத்தாலும், சிறிய அளவில் cosmic கதிர்ப்புகள் நம் வளிமண்டலத்தை அடையத்தான் செய்கிறது.

அத்துடன் சில தாவரங்கள், பாறைகள் இயற்கையாகவே கதிர்த்தொழிற்பாடுடையவை. நாம் கிட்டத்தட்ட மணித்தியாலத்திற்கு 0.1 – 0.2 microsieverts கதிர்த்தொழிற்பாட்டுக்கு ஆளாகிறோம். இது பெரிதளவில் தீங்கு விளைவிக்க கூடியதல்ல. 40sieverts அளவிலான கதிர்த்தொழிற்பாடேகொல்லும் தன்மை வாய்ந்தது.

வாழை பொட்டாசியம் அயனைக் கொண்டது, இக் கதிர்த்தொழிற்பாட்டு மூலகம் சிறிதளவில் (0.1 microsieverts) தொழிற்பாட்டை நிகழ்த்தக் கூடியது.

Loading...
Rates : 0
VTST BN