சாம்சங் கேலக்ஸி S4 சிறப்பம்சங்கள்

Loading...

சாம்சங் கேலக்ஸி S4 சிறப்பம்சங்கள்!சிஇஎஸ் 2013 அலையானது இப்பொழுதுதான் அடங்கிருக்கிறது. இவ்வருட CESஅயே ஒரு கலக்கு கலக்கியது சாம்சங் நிறுவனம் தான். கடந்த 8 முதல் 11 வரை நடந்த விழாவில் தினமொரு புதுமையை அறிமுகப்படுத்தியது.

உலகின் முதல் வளைவான OLED டிவி மற்றும் வளைந்து கொடுக்கும் ‘யூம்’ போன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி S4 வெளியாகப்போவதாகவும் அது சார்ந்த நுட்பத்தகவல்களும் வெளியாகியுள்ளன.

அதாவது செப்டம்பர் மாதம் தான் வெளியாகும் என்று கூறப்பட்ட அடுத்த தலைமுறை சாதனமான சாம்சங் கேலக்ஸி S4 அடுத்த மாதமே வெளியாகும் என்று கொரியாவின் பிரபல இணையதளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ் 4ஐ பிப்ரவரி அடுத்தமாதம் நடக்கவுள்ள MWC என்ற கண்காட்சியில் வெளியிடும் எனத்தெரிகிறது.


இந்த அதிநவீன ஸ்மார்ட்போனின் நுட்பக்கூறுகள் சில,

5 அங்குல AMOLED திரை,
1080பி HD தரம்,
ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன்,
குவாட்-கோர் A7ப்ராசெசர்,
28nm K மெட்டல் என்ற தொழில்நுட்பம்,
13 எம்பி கேமரா,
9.2 மிமீ அளவுகொண்ட வடிவமைப்பு,
S-Pen,

Loading...
Rates : 0
VTST BN