ஆன்ட்ராய்டில் இயங்கும் புதியதோர் சென் ஸ்மார்ட்போன்

Loading...

ஆன்ட்ராய்டில் இயங்கும் புதியதோர் சென் ஸ்மார்ட்போன்மொபைல்போன் வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து புதிய மொபைல்களை கொடுத்து மகிழ்வித்த சென் நிறுவனம் மீண்டும் ஓர் புதிய மொபைலை அறிமுகம் செய்கிறது. புதிய தொழில் நுட்பங்களை வழங்கும் அல்ட்ராபோன் யூ-1 என்ற ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வழங்குகிறது சென்.

ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரினை கொடுக்கும். இதனால் இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க ஓர் உந்துதல் கிடைக்கும்.


ஆன்ட்ராய்டில் அசத்தும் அல்ட்ராடேப் ஏ-900 டேப்லட்!

இந்த 3.5 எச்விஜிஏ தொடுதிரை வசதியினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பான தகவல்களை பார்க்கலாம். இதில் 3.2 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் ப்ளூடூத் ஏ-2டிபி வசதியினையும் பெறலாம். நவீன தொழில் நுட்ப வசதிகளுக்கு சிறப்பாக துணைபுரிய இதில் 1,200 எம்ஏஎச் பேட்டரியினையும் பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களை என்டிடிவி கேட்ஜெட்ஸ் வலைத்தளத்தில் பார்க்கலாம்.


வயர்லெஸ் எப்எம் ரேடியோ கொண்ட டாப்-5 மொபைல்போன்கள்!

இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி 5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 144 மணி நேரம் ஸ்டான்-பை டைமினை கொடுக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டியூவல் சிம் நெட்வொர்க்கிற்கு சப்போர்ட் செய்யும் வசதியினையும் பெறலாம். வைபை மற்றும் ப்ளூடூத் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 512 எம்பி ரேம் மற்றும் 32 ஜிபி எக்ஸ்பேண்டபில் ஸ்டோரேஜ் வசதியினை கொடுக்கும்.


பட்ஜெட் விலையில் புதிய சென் டேப்லட்!

பொதுவாக ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் சென் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான விலையினையும் கொண்டதாக இருக்கும். இந்த சென் யூ-1 ஸ்மார்ட்போன் ரூ. 4,999 விலையினை கொடுக்கும்.


சென் யூ-1:

3.5 எச்விஜிஏ தொடுதிரை வசதி
1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
3.2 மெகா பிக்ஸல் கேமரா
1,200 எம்ஏஎச் பேட்டரி
5 மணி நேரம் டாக் டைம்
144 மணி நேரம் ஸ்டான்-பை டைம்
வைபை நெட்வொர்க் வசதி
32 ஜிபி எக்ஸ்பேண்டபில் ஸ்டோரேஜ் வசதி

Loading...
Rates : 0
VTST BN