வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற தொழில் நுட்ப வசதியுடன் வரும் கேல்கஸி கேமரா

Loading...

வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற தொழில் நுட்ப வசதியுடன் வரும் கேல்கஸி கேமராஆன்ட்ராய்டு ஆற்றல் கொண்ட கேலக்ஸி கேமராவினை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இந்த கேலக்ஸி கேமராவில் 4.8 இஞ்ச் எச்டி சூப்பர் எல்சிடி திரையினையும் பெறலாம். இதன் திரையில் தெளிவான புகைப்படங்களை எளிதாக பெற முடியும்.

கூகுள் ஆன்ட்ராய்டு 4.1 ஜின்ஜர்பிரெட் இயங்குதளம் கொண்டதாக இருக்கும். இந்த கேமராவின் இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1.4 குவாட் கோர் பிராசஸரினையும் பயன்படுத்தலாம். இதில் 16 மெகா பிக்ஸல் கேமராவினையும், 21 X ஆப்டிக்கல் சூம் வசதியினையும் சிறப்பாக பெறலாம்.

கேமராவில் 3ஜி நெட்வொர்க்கிற்கு சப்போர்ட் செய்வது போன்ற வசதி வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு அம்சம் என்றும் கூறலாம். இந்த கேல்கஸி கேமரா வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற தொழில் நுட்ப வசதியினை வழங்கும்.

இதில் 1,650 எம்ஏஎச் பேட்டரி உயர்ந்த தொழில் நுட்பத்திற்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும். இதில் ஸ்டான்-பை டைமாக 280 மணி நேரத்தினையும் பெறலாம். எந்த கேமராவாக இருப்பினும் அதன் எடை மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க எந்நேரமும் கையில் வைத்திருக்க வேண்டிவரும்.

இதனால் இலகு எடையாக இருந்தால் சவுகரியமாக இருக்கும். அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி கேமரா 300 கிராம் எடை கொண்டதாக இருக்கும். இந்த சாம்சங் கேலக்ஸி கேமரா ரூ. 29,900 விலை கொண்டதாக இருக்கும்

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply