வெஸ்பா ஸ்கூட்டர் விலையை அதிரடியாக குறைத்த பியாஜியோ

Loading...

வெஸ்பா ஸ்கூட்டர் விலையை அதிரடியாக குறைத்த பியாஜியோபிரிமியம் ஸ்கூட்டராக நிலைநிறுத்தப்பட்டிருக்கும் வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது பியாஜியோ.

கடந்த ஆண்டு ஏப்ரலில் வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரை பியாஜியோ விற்பனைக்கு கொண்டு வந்தது. ரூ.66,661 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்த வெஸ்பா ஸ்கூட்டர்(சென்னையில் ஆன்ரோடு விலை ரூ.80,000ஐ நெருங்கியது) மார்க்கெட்டில் எடுபடுமா என்ற பேச்சு எழுந்தது.

ஏனெனில், மார்க்கெட்டில் முன்னணியில் இருக்கும் ஸ்கூட்டர் மாடல்களைவிட இதன் விலை ரூ.15,000 வரை அதிகம் என்பதுதான். ஆனால், கணிப்புகளை பொய்யாக்கி ஓரளவு தனக்கென ஒரு ஸ்திரமான வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டது.

கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை 25,000 வெஸ்பா ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளது. எதிர்பார்த்த அளவு இல்லையென்றாலும், அதிக விலை கொண்ட இந்த ஸ்கூட்டர் பிரிமியம் விரும்பிகளின் சிறந்த தேர்வாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு பண்டிகை கால சலுகையாக வெஸ்பா ஸ்கூட்டரின் விலையை ரூ.6,500 வரை பியாஜியோ குறைத்தது. இதைத்தொடர்ந்து, தற்போது வெஸ்பா ஸ்கூட்டரின் விலையின் ஆரம்ப விலையை ரூ.59,990 ஆக குறைத்து நிர்ணயம் செய்துள்ளது பியாஜியோ.

இதனால், வெஸ்பா ஸ்கூட்டரின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை குறைப்பு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வெஸ்பா எல்எக்ஸ்125 ஸ்கூட்டரின் பிரத்யேக படங்களை ஸ்லைடரில் காணலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply