வெள்ள அபாயத்தை முன்கூட்டி அறிவிக்கும் கூகுள்

Loading...

வெள்ள அபாயத்தை முன்கூட்டி அறிவிக்கும் கூகுள்வெள்ளம் வருவதற்கு முன்பே அதன் அபாயத்தை தெரிவிக்கும் புதிய வசதியை கூகுள் வழங்கவுள்ளது.

இந்தியாவில் பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு இருப்பினும், வெள்ள பாதிப்பே அனைவரையும் கடுமையாக பாதிக்கிறது. வெள்ளத்தார் நாடு முழுவதும் சராசரியாக 3 கோடி பேர் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல், சராசரியாக 7.21 மில்லியன் ஹெக்டேர் நிலங்களும், பயிர்கள் சேதமடைவதால் ரூ.1,118 கோடி இழப்பும் ஏற்படுகிறது.

இந்நிலையில், முன்கூட்டியே வெள்ளம் அபாயம் குறித்து எச்சரிக்கை செய்யும் புதிய அலர்ட் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, இந்தியாவில் உள்ள 170 ஆற்றின் நீர்மட்டம் குறித்த தகவல்களை மத்திய அரசின் சி.டபிள்யூ.சி. அமைப்புடன் இணைந்து உடனடியாக வழங்க கூகுள் தயாராகி வருகிறது. இதன் மூலம் வெள்ள அபாயம் ஏற்பட்டால் மக்களுக்கு உடனடியாக எச்சரிக்கை செய்ய முடியும். அதேபோல், பேரிடர் நேரத்தில் மக்கள் சம்பவ இடத்தை விட்டு வெளியேறுவதற்கான தகவல்களும், வழிமுறைகளும் வழங்கப்படும்.

இந்த தகவல்களை கூகுள் வெப் சர்ச், கூகுள் நவ் கார்ட்ஸ், கூகுள் ஆப்ஸ், கூகுள் பப்ளிக் அலர்ட்ஸ் ஹோம்பேஜ் ஆகியவற்றில் கணினி மற்றும் மொபைலில் ஆன்லைன் வழியாக தெரிந்து கொள்ளலாம்.

கூகுள் நிறுவனம் சென்ற ஆண்டு புயல் வருவதை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் ‘சைக்ளோன்’ வசதியை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply