விற்பனைக்கு வரும் லுமியா 920

Loading...

விற்பனைக்கு வரும் லுமியா 920சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்பட்டு வரும் நோக்கியா லுமியா-920 ஸ்மார்ட்போனை, அமெரிக்க தொலை தொடர்பு சேவை நிறுவனமான ஏடி&டி வருகிற நவம்பர் மாதம் அறிமுகம் செய்கிறது.

விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்கள், போட்டி போட்டு கொண்டு மொபைல் சந்தைகளில் விற்பனை செய்யயப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் லுமியா-920 ஸ்மார்ட்போன், வரும் நவம்பரில் விற்பனைக்கு வருவதாக தெரிவித்திருக்கிறது அமெரிக்க ஏடி&டி நிறுவனம்.

லுமியா-920 ஸ்மார்ட்போன் மட்டும் அல்லாது, குறைந்த விலையில் லுமியா-820 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஏடி&டி நிறுவனம் லுமியா வரிசை ஸ்மார்ட்போன்கள் மட்டும் அல்லாது, விண்டோஸ் இயங்குதளம் கொண்ட எச்டிசி-எக்ஸ் ஸ்மார்ட்போனையும் நவம்பரில் அறிமுகம் செய்வதாக தெரிகிறது.

ஆனால் லுமியா-920, எச்டிசி 8-எக்ஸ், லுமியா-820 ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வருவது பற்றி தான் தகவல்கள் கூறுகின்றதே தவிர, இந்த ஸ்மார்ட்போன்களின் விலை பற்றிய தகவல்கள் ஏதும் இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை. இப்படி விலை பற்றிய தகவல்களையும், நமது நாட்டில் அறிமுகமாவது பற்றிய தகவல்களையும் காத்திருந்து பெறலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply