வித்தியாசமான சுவையுடைய முட்டை குழம்பு

Loading...

வித்தியாசமான சுவையுடைய முட்டை குழம்பு

தேவையான பொருட்கள்:
முட்டை – 3-4 (வேக வைத்தது) வெங்காயம் – 2 பூண்டு – 4-5 பல் பச்சை மிளகாய் – 2-3 மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் புதினா – 1 கிளை கொத்தமல்லி – சிறிது சீரகம் – 1 டீஸ்பூன் தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன் தண்ணீர் – 1/2 கப் உப்பு – தேவையான அளவு கரம் மசாலா – 1 சிட்டிகை எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் வெங்காயம், புதினா, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முட்டையின் தோலை உரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முட்டையைப் போட்டு லேசான பொன்னிறத்தில் பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் உள்ள அதிகப்படியான எண்ணெயை எடுத்து விட்டு, தாளிப்பதற்கு தேவையான அளவு வைத்துக் கொண்டு, சீரகம் சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை போட்டு, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் வதக்க வேண்டும். மசாலாவில் உள்ள பச்சை வாசனை போனதும், அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி, தக்காளி சாஸ் மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். கிரேவியானது ஓரளவு கெட்டியானதும், அதில் வறுத்து வைத்துள்ள முட்டை இரண்டாக வெட்டி போட்டு, ஒரு முறை கிளறி இறக்கினால், வித்தியாசமான சுவையுடைய முட்டை குழம்பு ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply