வாழைப்பூ துவையல்

Loading...

வாழைப்பூ துவையல்
தேவையான பொருட்கள் :

ஆய்ந்து, சுத்தம் செய்த வாழைப்பூ – ஒரு கப்
உளுத்தம்பருப்பு – அரை கப்
காய்ந்த மிளகாய் – 4
புளி – 50 கிராம்
தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், சீரகம், ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

ஆறியதும் புளி, உப்பு, தேங்காய் துருவல், வாழைப்பூ சேர்த்து மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்க…

வாழைப்பூ துவையல் ரெடி! விரும்பினால், வாழைப் பூவை வதக்கி அரைக்கலாம்.

இதை சாதத்துடன் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply