வளரும் குழந்தைகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கனி

Loading...

வளரும் குழந்தைகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கனிகொய்யா பழத்தில் வைட்டமின் பி, சி ஆகிய உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.
இதர பழங்களை ஒப்பிடும்போது கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், வளரும் குழந்தைகளுக்கு இக்கனி ஒரு வரப் பிரசாதமாகும்.
மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், அப் பிரச்னையில் இருந்து மீளலாம்.
கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும்.
இந்த பழம் செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும்.
இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
கொய்யா பழத்தில் உள்ள லைகோபைன்(Lycopene)மற்றும் கரோட்டினாய்டுகள்(Carotenoids) புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டவை.
இப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
கொய்யா பழத்தை தோல் நீக்கி சாப்பிடுவதை விட, தோலுடன் அப்படியே சாப்பிட வேண்டும், இது முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும்.

குறிப்பு

இப்பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது, அதேபோன்று வாதநோய் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடாமல் தவிர்ப்பது நலம்.
கொய்யா பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு.
நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும்.
இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் இருமல் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் தோல் வியாதி அதிகரிக்கும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply