வயதை குறைத்துக்காட்டும் சுடிதார்

Loading...

வயதை குறைத்துக்காட்டும் சுடிதார்வயதை குறைத்துக்காட்டும் டிரஸ் என்றால் அது சுடிதார், சல்வார் கமீஸ்தான். வயது, உருவ அமைப்பைப் பார்த்து துணி எடுத்துக் கொள்வது நல்லது.
பிளெய்ன் துணியில் மிகச் சிறிய டிசைன், கழுத்து, ஓரங்களில் மெல்லிய எம்ப்ராய்ட்ரி டிசைன், சைடு ஸ்லிட்டில் டிசைன் அம்சமாக இருக்கும்.
நீளவாக்கில் கோடு, மெல்லிய கொடி போன்ற டிசைன் உயரமாக காட்டும்.
ஜரிகை வைத்து தைத்தால், சல்வாரின் முன் பக்க முழு நீளத்துக்கும் வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று அல்லது ஒன்றரை இன்ச்சுக்கு மேல் வேண்டாம்.

குண்டாக இருப்பவர்கள்:

ஸ்லிட்டில் ஜரிகை வைத்து தைக்காதீர்கள். அது சுற்றளவை கூட்டி காண்பிக்கும்.
எந்த டிசைனும் மெல்லியதாக இருக்கட்டும். அடர்த்தி டிசைன்களே வேண்டாம்.
முழுக்கை டாப்ஸ், மிகவும் குறைந்த கையுள்ள டாப்ஸ் உங்களுக்கு பொருந்தாது. நடுத்தர நீளம், முக்கால் கை பொருந்தும்.
ரொம்ப டைட் வேண்டாம். லூசாகவும் வேண்டாம். இடுப்பு மட்டும் சற்று லூசாக இருக்கட்டும். அது மடிப்புகளை மறைக்கும்.
அகலமான சல்வார், பஞ்சாபி பைஜாமா உங்களுக்கு சரிவராது. காலை ஒட்டின, அகலம் குறைவான சல்வார் நன்றாகப் பொருந்தும்.
சுருக்கம் வைத்த பைஜாமா வேண்டாம். இடுப்பு அளவை மேலும் அதிகரித்துக் காட்டும்.
மேல்புறம் சுருக்கம் கொடுத்துத் தைக்காமல், ஒரு ஜாண் பட்டி கொடுத்து அதற்கு கீழிருந்து சல்வார் வரும்படி தைத்து கொள்ளுங்கள். இடுப்பு இளைத்த மாதிரி காட்டும்.
பார்டர் அழுத்தமான டிசைன், திக் லைன் போட்ட மெட்டீரியல் வேண்டவே வேண்டாம்.
காட்டன் லைனிங் கொடுத்து தைக்கக்கூடிய லேஸ், ஷிபான் துணிகள் வேண்டாம். குண்டாக காட்டும். ஜீன்ஸ் அணிவதை தவிர்த்து விடுங்கள். குளிர் பிரதேசங்களுக்கு போனாலும் ஓவர்கோட் இருக்குதே. வயது, உருவ அமைப்பைப் பார்த்து துணி எடுத்துக் கொள்வது நல்லது.
பிளெய்ன் துணியில் மிகச் சிறிய டிசைன், கழுத்து, ஓரங்களில் மெல்லிய எம்ப்ராய்ட்ரி டிசைன், சைடு ஸ்லிட்டில் டிசைன் அம்சமாக இருக்கும்.
நீளவாக்கில் கோடு, மெல்லிய கொடி போன்ற டிசைன் உயரமாக காட்டும்.
ஜரிகை வைத்து தைத்தால், சல்வாரின் முன் பக்க முழு நீளத்துக்கும் வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று அல்லது ஒன்றரை இன்ச்சுக்கு மேல் வேண்டாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply