லுமியா 800 மற்றும் எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு

Loading...

லுமியா 800 மற்றும் எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடுசிறப்பான 2 ஸ்மார்ட்போன்களுக்கான ஒப்பீட்டினை பற்றி பார்க்கலாம். இதில் நோக்கியா லுமியா-800 மற்றும் சோனி எக்ஸ்பீரியா ஜே ஆகிய இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே சிறப்பான தொழி்ல நுட்ப வசதியினை கொண்டதாக இருக்கிறது.


இயங்குதளம்:

எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டு இயங்கும். லுமியா-800 ஸ்மார்ட்போன் விண்டோஸ் மேங்கோ 7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதாக இருக்கும்.


திரை வசதி:

எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரை வசதியினையும் வழங்கும். இதில் 480 X 854 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெறலாம். லுமியா-800 ஸ்மார்ட்போன் 3.7 இஞ்ச் திரை வசதியினை கொடுக்கும்.


பிராசஸர்:

எக்ஸ்பீரியா ஜே 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-5 பிராசஸரினை கொடுக்கும். லுமியா-800 ஸ்மார்ட்போனில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்கார்பியன் பிராசஸரினை அளிக்கும்.


கேமரா விவரங்கள்:

எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமரா, லெட் ப்ளாஷ் தொழில் நுட்பத்தினை வழங்கும். இதில் 0.3 மெகா பிக்ஸல் முக்பபு கேமராவினையும் பெறலாம். லுமியா-800 ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறப்பான புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை வழங்கும்.


பேட்டரி:

இந்த 2 ஸ்மார்ட்போன்களிலும் ஜிபிஎஸ், வைபை மற்றும் ப்ளூடூத் ஆகிய வசதிகளை பெற முடியும். இதில் யூஎஸ்பி தொழில் நுட்பத்தினையும் சிறப்பாக பயன்படுத்த முடியும். எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் 1,750 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியின் மூலம் 7.5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 25 நாட்கள் ஸ்டான்-பை டைம் ஆகிய வசதியினை
வழங்கும். நோக்கியா லுமியா-800 ஸ்மார்ட்போன் 1,450 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 9 மணி நேரம் டாக் டைம் மற்றும் 335 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் கொடுக்கும்.


ஸ்மார்ட்போன்களின் விலை:

எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் ரூ. 16,490 விலை கொண்டதாகவும், லுமியா-800 ஸ்மார்ட்போன் ரூ. 18,867 ஒட்டிய விலையினை கொண்டதாகவும் இருக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply