ரூ.3 கோடி செலவில் உலகிலேயே மிக பிரமாண்ட கலர் டிவி

Loading...

ரூ.3 கோடி செலவில் உலகிலேயே மிக பிரமாண்ட கலர் டிவிஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பந்தைய கார் தயாரிக்கும் பிரபல நிறுவனம் பிரமாண்ட கலர் டி.வி. பெட்டியை உருவாக்கி இருக்கிறார்கள். இதன் விலை எவ்வளவு தெரியுமா? சுமார் 3 கோடியே 35 லட்சம்(4,14,000 பவுண்ட்) ஆகும். ‘சி.எஸ்.இ.இ.டி. 201’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டி.வி.யின் திரை 16 அடி அகலம் இருக்கும். ஆண்டுக்கு 25 டி.வி.களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய இருக்கிறார்கள்.இங்கிலாந்து நாட்டில் தற்போது ரூ.18 லட்சம் மதிப்பில் 84 அங்குலம்( 7 அடி அகலம் திரை) கொண்ட டி.வி.க்கள் விற்பனையில் இருக்கின்றன. இப்போது ஆஸ்திரியா நிறுவனம் வெளியிட்டுள்ள 16 அடி அகன்ற திரை டி.வி.யே உலகிலேயே மிக பிரமாண்ட டி.வி. என கருதப்படுகிறது.

Loading...
Rates : 0
VTST BN