ரிம் நிறுவனத்தின் ப்ளாக்பெரி மெசஞ்சர் சேவை

Loading...

ரிம் நிறுவனத்தின் ப்ளாக்பெரி மெசஞ்சர் சேவைரிம் நிறுவனத்தின் ப்ளாக்பெரி மெசஞ்சர் சேவை மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. ப்ளாக்பெரி வாடிக்கையாளர்கள் இந்த சேவையை முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தனது ப்ளாப்பெரி மெசஞ்சர் சேவையின் புதிய பீட்டா வெர்சனை தற்போது ரிம் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய சேவையின் முக்கியமான விசேஷம் என்னவென்றால் வைபையைப் பயன்படுத்தி ப்ளாக்பெரி மெசேஞ் வாடிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் இந்த சேவையின் மூலம் இலவசமாக பேசிக் கொள்ளலாம்.

அதாவது இந்த ப்ளாக்பெரி மெசஞ்சர் சேவை ப்ளாக்பெரி வாடிக்கையாளர்களுக்கு இடையே இலவச அழைப்புகளை விடுக்கும் சேவையை இனி வழங்க இருக்கிறது. இந்த புதிய அப்ளிகேசன் மூலம் ஒரே நேரத்தில் 7 பேரிடம் பேச முடியும்.

இந்த ப்ளாக்பெரி மெசஞ்சர் அந்த வாடிக்கையாளரின் ப்ரொபைல், கான்டாக்ட் மற்றும் அவருடைய குழுக்கள் போன்றவற்றை ப்ளாக்பெரி ஐடியுடன் இணைத்து வைத்திருக்கும் சேவையையும் வழங்குகிறது. அதனால் மற்றவர்களோடு மிக எளிதாக பரிமாற்றம் செய்யவும் முடியும். இந்த புதிய சேவையை ப்ளாக்பெரி பீட்டா சோனிலிருந்து பெற முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply