ரவை கேசரி | Tamil Serial Today Org

ரவை கேசரி

Loading...

ரவை கேசரி
தேவையான பொருட்கள்

ரவை ­­_1கப்
தண்ணீர் _1 கப்
பால் _1 கப்
சீனி _11/2 கப்
நெய் அல்லது பட்டர்_ 4 டேபிள்ஸ்பூன்
கலர் பவுடர் அல்லது கலரிங் _சிறிதளவு
ஏலக்காய்ப் பொடி _சிறிதளவு
உப்பு _சிறிதளவு
முந்திரி _சிறிதளவு
உலர்ந்த திராட்சை _சிறிதளவு


செய்முறை

வாணலியில் 2 மேசைக் கரண்டி நெய் விட்டு உலர்ந்த திராட்சையையும் முந்திரியையும் நன்கு வறுத்து தனியாக எடுக்கவும்.
மீண்டும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ரவையை இலேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதே வாணலியில் கெட்டியான பால் மற்றும் தண்ணீரை ஊற்றி அதில் கலரிங் அல்லது கலர் பவுடரை சிறிதளவு, சீனி கலந்து கொதிக்க விட வேண்டும்.
அந்த கலவை கொதித்தவுடன் ரவையை அதில் போட்டு நன்கு வேக வைக்கவும். ரவையை கிண்டும் போது கட்டியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ரவை கலவையானது ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும்.
இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொடி தூவி இறக்கவும்.
பொரித்து வைத்திருக்கும் உலர்ந்த திராட்சை, முந்திரியில் பாதியைக் கலந்து கொள்ளவும்.
அடுப்பிலிருந்து இறக்கிய கேசரியை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, மீதமுள்ள உலர்ந்த திராட்சை, முந்திரியினால் அலங்கரிக்கவும்.

Loading...
Rates : 0
VTST BN