மென்மையான மேனிக்கு பசும்பால் குளியல்

Loading...

மென்மையான மேனிக்கு பசும்பால் குளியல்இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி சருமத்தினை, அழகாக பாதுகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அதிக வெயிலில் சென்றால் சருமம் உலர்ந்து விடும். இதனை தவிர்க்கவும் பளபளப்புடன் திகழவும், தினமும் சிறிதளவு பசும்பாலை உடல் முழுக்க தேய்த்து விட்டு பின்பு குளிக்கலாம். பாலில் எலுமிச்சை சாறு கலந்து உடம்பில் தேய்த்துக்குளிக்க, முகமும் தேகமும் பளிச்சிடும். வெந்நீரைவிட சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது. குளித்தபின் துணியால் அழுத்தித் துடைக்காமல் மென்மையாக ஒற்றி துடைப்பது சருமத்திற்கு பாதுபாப்பு. ரசாயனக் கலவையும், கொழுப்பு அமிலங்களும் நிறைந்த சோப்பு தேய்த்து குளிப்பதை விட வீட்டிலேயே கிடைக்கும் மஞ்சள்தூளும், சந்தனமும் எடுத்து ஆலிவ் எண்ணெயில் கலந்து உடம்பில் பூசி ஊற வைக்கவும். பின்னர் 15 நிமிடம் கழித்து குளிக்க, முகமும், தேகமும் மினுமினுக்கும். பீட்ரூட் அரைத்து சாறு எடுத்து அதனை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் காய வைக்கவும். பின்னர் தண்ணீரால் கழுவி துடைத்தால் முகம் பொலிவு பெறும். கொதிக்க வைத்த கேரட் சாறினை குளிரவைத்து பின்னர் முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் குளிக்க, முகமும், தேகமும் பளபளப்பாகும். மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும். பச்சைப் பயிறு மாவு மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பளபளப்பாகும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply