மெதுவடை

Loading...

மெதுவடை
தேவையான பொருட்கள்

வெள்ளை உழுந்து _ 1/4 கிலோ
சிறிய வெங்காயம் _ 10
கறிவேப்பிலை _ 10 இலைகள்
பச்சைமிளகாய் _ 1
உப்பு _ தேவைக்கேற்ப
எண்ணெய் _ வடை பொறிக்க தேவையான அளவு


செய்முறை

உளுத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த உளுந்தை நன்றாக கழுவி பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைஸாக அரைக்கவும்.
அரைத்த மாவுடன் வெங்காயம் , கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போன்றவற்றை சிறிது சிறிதாக நறுக்கி பிசைந்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெயை வாணலியில் ஊற்றி பின் அது சூடானதும் சிறிது மாவை எடுத்து தட்டையாக செய்து நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போடவும்.
நன்றாக வெந்து தங்க நிறத்தில் வந்தவுடன் வடையை எடுக்கவும்.
சூடான மெது வடை தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply