முருங்கை மருத்துவ பயன்

Loading...

முருங்கை மருத்துவ பயன்]சித்த வைத்தியத்தில் ‘சமூலம்’ என்ற ஒரு வார்த்தை உண்டு. சில தாவரங்களில் சில பகுதிகள் மாத்திரமே பயன்படும். தாவரத்தின் எல்லா பாகங்களும் – வேர், தண்டு, பட்டை, காய், பூ, இலை – பயனாகும் தாவரங்களும் உண்டு. ‘சமூலம்’ என்றால் எல்லா பாகங்களும் பயன்படும் என்பது பொருள். அதற்கு சிறந்த உதாரணம் முருங்கை. இலை, காய் முதலியவை தவிர, முருங்கை மரப்பட்டையின் பிசின் கூட பயன்படும். பழங்காலத்திலிருந்தே சிறந்த உணவாக முருங்கை பயன்படுத்தப்பட்டுள்ளது.


முருங்கை கீரையின் பயன்கள்

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம். முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.

இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.

மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்தசுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயம்,வைட்டமின் உள்ளது.

கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம்,தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சுப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படு ம் திருகுவலு,வயிற்றுப்போக்க ு கட்டுபடும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் செர்த்துப பருகிவர காசநோய்,கீழ்வாயு,முதுகுவலி குணப்படும்.



வைட்டமின்கள் :
முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயம்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்

அகத்திய முனிவர், முருங்கைக் கீரையை நெய்யில் பொரித்து தினமும் உண்டு வர “யாளி” போல் பலம் பெருகும் என்கிறார். யாளி பத்து யானைகளின் பலம் கொண்டது என்பார்கள். இதை தெரிவிக்கும் அகத்திய முனிவர்களின் பாடல் – “நன் முருங்கைத்தழை, நெய்வார்த்துண்ணில்
“யாளி” யென விஞ்சுவார் போகத்தில்”
அகத்தியர் குணபாடத்தில் வரும் சித்தர் பாடல் ஒன்று கீழ்வருமாறு
செறிமந்தம் வெப்பந் தெரிவிக்குந் தலைநோய்
வெறிமூர்ச்சை கண்ணோய் விலகு – மறமே
நெருங்க யிலையத்த விழி நேரிழையே நல்ல
முருங்கை யிலையை மொழி.
முருங்கை இலையினால் அக்கினி மந்தம், உட்சூடு, தலைநோய், வெறிமூர்ச்சை, கண்ணோய் ஆகியவை நீங்கும்.
இதன் இலையை கட்டிகள் உடைவதற்கும் வதக்கிக் கட்டுதல் உண்டு.
உடல் வலிமை மட்டுமல்ல, உள்ளிருக்கும் நரம்புகளையும் வலுப்படுத்தும். நரம்புத்தளர்ச்சியை போக்கும்.
மூட்டுவலிகள் போக, தினமும் முருங்கை கீரையை உப்புடன் வேக வைத்து 15 நாள் சாப்பிடவும்.
முருங்கை கீரையில் மஞ்சள், பூண்டு, உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் வாய்வு கோளாறுகள் விலகும்.
முருங்கை கீரையில் விட்டமின் ‘ஏ’ இருப்பதால் கண்பார்வைக்கு நல்லது. நீர் விடாமல் வேக வைத்து கண்களின் மீது வைத்து கட்டினால் கண் நோய்கள் நீங்கி இலையின் ரசத்துடன் தேன் சேர்த்து கண்ணிமைகளில் தேய்க்கலாம்.
முருங்கை இலையை அரைத்து வீக்கங்களின் மேல் ‘பற்று’ போடலாம்.
இலைச்சாற்றை 40 கிராம் அளவில், கொடுக்க, நன்றாக வாந்தியாகும்.
முருங்கை கீரை இரத்த சோகையை போக்கும். 10 மிளகு சேர்த்து அரைத்த முருங்கைக் கீரை (ஒரு கைப்பிடி) யை 15 நாள் சாப்பிட வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க, 20 நாள் தினசரி காலை, மாலை இரு வேளை தேன் + முருங்கை இலைச்சாறு (15 மில்லி) + 10 மிளகு (பொடித்தது) அருந்தி வரவும்.
முருங்கை கீரை ஆண்மையை பெருக்கும். அதன் சாற்றில் ஜாதிக்காயை உடைத்து சேர்த்து ஊற வைக்கவும். பிறகு உலர்த்தி, பொடியாக்கி தினமும் இரவில் 2 கிராம் சாப்பிட்டு வர, காதல் உணர்வுகள் அதிகமாகும்.
சிறுநீர் தாராளமாக, சுலபமாக பிரிய பார்லி கொடுப்பதுண்டு. அத்துடன் முருங்கை கீரை, சீரகம் (கால் ஸ்பூன்) சிறிதளவு மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் நீர்க்கட்டு நீங்கி, சிறுநீர் தாராளமாக பிரியும். முருங்கை கீரை சாற்றை குடித்தால் வயிற்று வலி தீரும்.
முருங்கை இலைகளை அரைத்து சாறு எடுத்து, சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வயிற்றுப் பூச்சிகள் அழியும்.
எள் சேர்த்து சமைத்த முருங்கை கீரை கூட்டு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
முருங்கைக் கீரை ஒரு சர்வரோக நிவாரணி. மலச்சிக்கலை சீக்கிரமாக போக்கும்.


100 கிராம் முருங்கை கீரையில் உள்ள சத்துக்கள்

நீர்ச்சத்து – 75.9%, புரதம் – 6.7%, கொழுப்பு – 1.7%, தாதுப்பொருட்கள் – 2.3%, நார்ச்சத்து – 0.9%, கார்போஹைடிரேட் – 12.5%, கால்சியம் – 440 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 70 மில்லிகிராம், அயச்சத்து – 0.85 மில்லிகிராம், விட்டமின் ‘சி’ – 260 மில்லிகிராம், இதர ‘பி’ காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் சிறிதளவு, கலோரி அளவு – 92 கிலோ கலோரி.
முருங்கை கீரை கூட்டு
தேவையான பொருட்கள்
முருங்கை கீரை – தேவையான அளவு
துவரம் பருப்பு – 50 கிராம்
பாசிப் பருப்பு – 50 கிராம்
தேங்காய் – 1/2 மூடி
சின்ன வெங்காயம் – 1 பெரிய கரண்டி அளவு
மிளகாய் வற்றல் – 3
ஜீரகம், கடலைப்பருப்பு – ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
தனியா – 2 ஸ்பூன்
தக்காளி – 2
நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு


செய்முறை

முதலில் பருப்புகளை மஞ்சள் சேர்த்து வேக வைக்கவும்.
இதர பொருட்களை தனித்தனியே வறுத்து பொடியாக்கவும்.
பருப்புகளுடன் கீரையை சேர்த்து பொடிகள், உப்பு இவற்றை போட்டு வேக வைக்கவும்.
தனி வாணலியில் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி தாளிக்க வேண்டும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply