முந்திரிபருப்பு பகோடா

Loading...

முந்திரிபருப்பு பகோடா
தேவையானவை

முந்திரி – அரை கிலோ
கடலை மாவு – அரை கிலோ
வனஸ்பதி – 1/4 கிலோ
பெ.வெங்காயம்
(நறுக்கியது) – 1/4 கிலோ
அரிசி மாவு – 150 கிராம்
ப.மிளகாய் – 5
கறிவேப்பிலை – 3 கொத்து
இஞ்சி – சிறிய துண்டு
பொரிக்க எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு


செய்முறை :

வனஸ்பதியில் சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும்.

இதில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, உப்பு, முந்திரி பருப்பு, கடலை மாவு, அரிசி மாவு, கறிவேப்பிலை ஆகியவை போட்டு நன்கு பிசறிக் அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், கலவை மாவை சிறு கரண்டி அள்ளி போட்டோ அல்லது சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சூடான மற்றும் சுவையான முந்திரி பகோடா ரெடி….!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply