முதுகு வலியால் கஷ்டப்படுறீங்களா அப்ப இத கொஞ்சம் செய்து பாருங்களன்

Loading...

முதுகு வலியால் கஷ்டப்படுறீங்களா அப்ப இத கொஞ்சம் செய்து பாருங்களன்நீண்ட நேரம் ஒரே இடத்தில் தவறான நிலையில் அமர்ந்து வேலை செய்வோர் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் முதுகு வலி. இந்த முதுகு வலி வந்தால் எந்த ஒரு பணியையும் செய்ய முடியாது. பின்புறத்தில் கடுமையான வலியை சந்திக்க வேண்டியிருக்கும். சில நேரங்களில் படுக்கக்கூட முடியாது. அவ்வளவு தொல்லைமிக்க ஓர் பிரச்சனை தான் முதுகு வலி.

இந்த முதுகு வலி பிரச்சனைக்கு எத்தனையோ மருத்துவர்களை சந்தித்திருப்பீர்கள். ஆனால் முதுகு வலிக்கு சிறந்த நிவாரணி யோகா நிலைகள் தான். தினமும் ஒருசில யோகாசனங்களை செய்து வந்தால், முதுகு வலியில் இருந்து விடுபடலாம். இங்கு முதுகு வலியில் இருந்து நிவாரணம் தரும் யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தினமும் செய்து, முதுகு வலியில் இருந்து விடுதலை பெறுங்கள்.அதோ முக சவனாசனம்

முதுகு வலிக்கு ஓர் சிறந்த மற்றும் ஈஸியான ஓர் யோகா நிலை தான் அதோ முக சவனாசனம். இந்த நிலையினால் முதுகு தண்டுவடம், தொடையின் பின்புறத் தசை, அடிமுதுகு போன்றவை வலிமையடையும். இந்த யோகாவை தினமும் செய்து வந்தால், முதுகு வலியில் இருந்து விடுபடலாம்.தனுராசனம்

தனுராசனம் முதுகிற்கு மிகவும் நல்லது. இந்த யோகா நிலை முதுகின் மேல் பகுதி மற்றும் தோள்பட்டையின் நீட்சித்தன்மை மற்றும் வலிமையை அதிகரிக்க உதவும். இந்த யோகாவை தினமும் செய்து வந்தால், முதுகு வலி வருவதைத் தடுக்கலாம்.ஊர்துவ முக சவனாசனம்

இது மற்றொரு எளிமையான யோகாசனம். இந்த யோகாசனத்திற்கு குப்புறப்படுத்து கைகளை ஊன்றி, படத்தில் காட்டியவாறு தலையை மேலே தூக்க வேண்டும். இந்த நிலை அடிவயிறு மற்றும் முதுகுப் பகுதியை வலுப்படுத்தும். குறிப்பாக இந்த யோகா செய்வதன் மூலம் முதுகு வலி நீங்குவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.பஸ்சிமோத்தாசனம்

இந்த யோகாசனம் தொடையின் பின்புற தசையின் நீட்சித்தன்மையை அதிகரிக்கும். மேலும் இந்த ஆசனம் முதுகு வலியில் இருந்து நல்ல நிவாரணம் தரும். எனவே உங்களுக்கு கடுமையான முதுகு வலி என்றால், இந்த ஆசனத்தை தினமும் தவறாமல் செய்து வாருங்கள்.பாலாசனம்

இந்த யோகாசனத்தினால் முதுகுப்பகுதியின் நீட்சித்தன்மை அதிகரிக்கும். மேலும் முதுகுப்பகுதி வலிமைப் பெறுவதோடு, மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து, மூளையின் செயல்பாடு மேம்படும். எனவே இந்த யோகாசனத்தை தினமும் செய்து முதுகுவலியில் இருந்து விடுதலை பெறுவதோடு, மூளையின் செயல்பாட்டினையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply