முதன் முறையாக பிரமிட்டின் உட்புறத் தோற்றம்

Loading...

முதன் முறையாக பிரமிட்டின் உட்புறத் தோற்றம்எகிப்திலுள்ள பிரமிட்டுக்கள் இதுவரையிலும் தொல்பொருள் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. அதன் உட்பகுதியானது புதைக்கப்பட்டிருக்கலாமென நூற்றுக்கணக்ககான கற்பனை திரைப்படங்களும், புத்தகங்களும் வந்துள்ளன.

எனினும் வெளிப்புறத்தோற்றம் உண்மையில் அது எத்தகைய கடின உழைப்பாக இருக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது.

என்னதான் அதன் காலம் 1000 வருடங்களுக்கு மேற்பட்டதாக இருந்தாலும், அதுபற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளன. பல வருடங்களாக முயன்று தற்போது அதன் உட்புற கட்டமைப்பை அவர்களால் அறிய முடிந்துள்ளது.

இதற்காக கைறோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அண்டைவெளிக் கதிர்களை பயன்படுத்தி பிரமிட்டின் உட்பகுதிகளை ஆராய்ந்துள்ளனர்.

இக்கதிர்கள் அண்டைவெளியிலிருந்து இயற்கையாக கிடைப்பதுடன், ஊடுருவும் ஆற்றல் கூடியது. இது X-கதிர்களை பயன்படுத்தி மனித என்புக் கட்டமைப்பை பார்வையிடுவதை போன்றதுதான், ஆயினும் ஊடுருவும் ஆற்றல் இலத்திரன்களிலும் 200 மடங்கு கூடியது.

மலைகள், கடின பாறைகளை கூட ஊடுருவும் ஆற்றலுடையது. ஆய்வாளர் குழு 4500 வருடம் பழைமை வாய்ந்த பிரமிட்டை வெற்றிகரமாக அண்டைவெளிக் கதிர்கள் மூலம் ஆராய்ந்துள்ளனர்.

அதன்படி என்றுமில்லாதவாறு மியோன் துகள்களை பயன்படுத்தி உட்பகுதியை முழுமையாக அடையாளப்படுத்த முடிந்துள்ளது.

இது போன்ற மியோன் வரைபட முயற்சி 1960 களில் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அது வெற்றியளித்திருக்கவில்லை.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply