முட்டை ஸ்பாஞ்ச் ரெசிபி

Loading...

முட்டை ஸ்பாஞ்ச் ரெசிபி
தேவையான பொருட்கள்:
முட்டை – 5 வெங்காயம் – 3 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது) குடைமிளகாய் – பாதி (நறுக்கியது) பேக்கிங் பவுடர் – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்ற வேண்டும். பின் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், பேக்கிங் பவுடர் மற்றும் சிறிது உப்பை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் சிறு சிறு பௌல்களை எடுத்துக் கொண்டு அதில் வெண்ணெயை தடவி, முட்டைக் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, அந்த பௌல்களை வைத்து, தண்ணீரானது பௌலை விட அதிகமாக இல்வாதவாறு இருக்க வேண்டும். பின்னர் குக்கரை முழுவதுமாக மூடி விடாமல், ஓரளவு மூடி வைத்து, 15-20 நிமிடம் வேக வைத்து, இறக்கி விடவும். இப்போது சூப்பரான முட்டை ஸ்பாஞ்ச் ரெடி!!! இதனை பட்டர் பேப்பரைக் கொண்டு பக்கவாட்டில் கவர் செய்து பரிமாறலாம்.

குறிப்பு:
இதற்கு குக்கருக்கு பதிலாக, இட்லி பாத்திரத்தையும் பயன்படுத்தலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply