முட்டை ரோல்

Loading...

முட்டை ரோல்

தேவையான பொருட்கள் :
முட்டை – 1 சப்பாத்தி – 6 பெரிய வெங்காயம் – 3 பச்சை மிளகாய் – 1 கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு

செய்முறை :
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி 2 நிமிடம் கிளரி இறக்கி வைக்கவும். அடுத்து செய்து வைத்துள்ள சப்பாத்தியில் இந்த முட்டை பொரியலை வைத்து சுருட்டவும். இப்போது சுவையான முட்டை ரோல் ரெடி!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply