முட்டை பர்கர்

Loading...

முட்டை பர்கர்
தேவையான பொருட்கள்:
முட்டை – 2 (வேக வைத்தது) லெட்யூஸ் – 2 இலைகள் பன் – 2 மிளகுத் தூள் – 1 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன் தக்காளி – 1/2 (வட்டமாக நறுக்கியது) ப்ளேவர்டு தயிர் – 2 டேபிள் ஸ்பூன் மஸ்டர்டு சாஸ் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வேக வைத்த முட்டையை நீளவாக்கில் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு பன்னின் மீதும் லெட்யூஸ் இலைகளை வைக்க வேண்டும். பின்பு தக்காளி துண்டுகளை வைத்து, நீளவாக்கில் வெட்டிய முட்டை துண்டுகளை வைத்து, அதன் மேலே உப்பு, மிளகுத் தூள் மற்றும் சில்லி ப்ளேக்ஸ் தூவி, பின் தயிர், கஸ்டர்டு சாஸ் ஊற்றி, ஒன்றன் மீது ஒன்று வைத்தால், முட்டை பர்கர் ரெடி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply