முட்டை தோசை

Loading...

முட்டை தோசை
தேவையான பொருட்கள்:
முட்டை – 4 வெங்காயம் – 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது) கொத்தமல்லி – 1/2 கப் (நறுக்கியது) தோசை மாவு – 1 பௌல் மிளகுத்தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் முட்டையை ஒரு பௌலில் உடைந்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி, தோசை போல் தேய்க்க வேண்டும். பின்பு அதன் மேல் எண்ணெய் விட்டு, 2 டேபிள் ஸ்பூன் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை விட்டு, 2 நிமிடம் கழித்து, திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்து, தட்டில் வைக்க வேண்டும். பிறகு அதன் மேல் மிளகுத்தூளை தூவ வேண்டும். இப்போது சுவையான முட்டை தோசை ரெடி!!! இதனை அப்படியேவோ அல்லது தக்காளி சாஸ் உடனோ சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply