முக அழகிற்கு அடிப்படை

Loading...

முக அழகிற்கு அடிப்படைஒரு பக்கம் சிவப்பாக மாற வேண்டும் என்று கூவிக் கூவி விற்கப்படும் சிவப்பழகு கிரீம்களைப் பூசுவதாலோ, மற்றொரு புறம் கடலை மாவு, பாசிப் பருப்பு மாவு, பால், மஞ்சள், பழ விழுது போன்ற இயற்கையான பொருள்களைப் பூசுவதாலோ சருமத்தை அழகாகவும், மினுமினுப்பாகவும் மாற்றவிட முடியும் என நம்புகிறீர்களா?
செயற்கையான கிரீம்கள் மட்டுமல்ல, இயற்கையான பொருள்களைத் தோல் மீது பூசும்போதும் சருமத்துக்குத் தற்காலிகமான பலன்கள் மட்டுமே கிடைக்கும் என்கின்றனர் சரும நிபுணர்கள். சருமத்தின் அழகைத் தனியாகப் பராமரிக்க முடியாது, எல்லாமே முழு உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்ததுதான் என்பதே சரும நிபுணர்கள் வலியுறுத்தும் விஷயம்.


உணவே அடிப்படை

அதிலும் செயற்கை அழகு சாதனப் பொருட்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது அவற்றில் கலந்திருக்கும் பிளீச்சிங் பொருள்கள், பலவித சரும நோய்களை உருவாகக்கூடியவை.
செயற்கை அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது சருமத்தில் அங்கங்கே தோன்றும் பிக்மெண்டேஷன் (pigmentation) எனப்படும் கறுப்புத் திட்டுகள் முகத்தில் தோன்றுவதுதான், அதற்கான அறிகுறி. முகப்பரு, முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, வறண்ட சருமம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கும் முதல் மருந்து நாம் உட்கொள்ளும் உணவுதான். வெளிப்பூச்சு களிம்புகள் அத்தனையும் தற்காலிகத் தீர்வு மட்டுமே தரக்கூடியவை.

Loading...
Rates : 0
VTST BN