மில்க் புட்­டிங்

Loading...

மில்க் புட்­டிங்
தேவை­யான பொருட்கள்

கன்டெண்ஸ்ட் மில்க் – அரை டின்
பசும்பால் – முக்கால் டின்
முட்டை – 3
சீனி – 4 டேபிள்ஸ்­பூன்
வெனிலா எசன்ஸ் – 3 துளிகள்
கேசரி பௌடர் – ஒரு சிட்டிகை
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை


செய்­மு­றை

பசும்பாலைக் காய்ச்சி ஆறவிடவும்.

முட்டையை நன்கு அடித்துக் கலக்கவும். அத்துடன் டின் பாலை ஊற்றி கலக்கவும்.

காய்ச்சிய பாலுடன் முட்டைக் கலவை, எசன்ஸ் மற்றும் கேசரி பௌடர் சேர்த்து நன்கு கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சீனியைப் போட்டு, அடுப்பைப் பற்ற வைத்து பாத்திரத்தைச் சுற்றிலும் சூடுகாட்டினால் சீனி உருகி காரமல் ஆகும்.

பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு, காரமலை விரைவாக புட்டிங் ஊற்றி வைக்கவென்று எடுத்து வைத்துள்ள கிண்ணத்திற்கு மாற்றவும். கிண்ணத்தின் எல்லாப் பக்கங்களிலும் காரமலை படரவிடவும்.

அதில் முட்டைக் கலவையை ஊற்றவும்.

பின்னர் அதனை 20 நிமிடங்கள் நீராவியில் வேகவிட்டு எடுத்து, குங்குமப்பூவை மேலே தூவிவிடவும்.

ஆறியதும் காரமல் மேலே வருவது போல ஒரு தட்டுக்கு மாற்றி, துண்டுகளாய் வெட்­டி பரிமாறலாம்.

துண்டுகளின் மேல் மேலதிகமாக சிறிது காரமல் ஊற்றியும் பரிமாறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply