மாம்பழத்திலுள்ள உயிர்ச்சத்தின் பயன்கள்

Loading...

மாம்பழத்திலுள்ள உயிர்ச்சத்தின் பயன்கள்சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பழங்களில் மாம்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால், அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் ஏற்படும் என ஒதுக்குவதும் உண்டு. மாம்பழத்தில் 100 கிராமில் 12.2 தொடக்கம் 42.2 மில்லி கிராம் வரை விட்டமின் ஏ யும், 13.2 தொடக்கம் 80.3 மில்லி கிராம் வரை விட்டமின் சியும் உள்ளது.

தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால், இந்த இரண்டு விட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும்.

பல பேர்கள் மாம்பழத்தை முழுவதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்து விடுவர்.

மாம்பழத்தின் தோல் பகுதியில் தான், விட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை, நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.

வெண்ணெயில் அளவுக்கு அதிகமான விட்டமின் ஏ இருப்பதை, நாம் அறிவோம். இதே போன்றே, மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான விட்டமின் ஏ இருப்பதால், வெண்ணெயை உண்பதை விட மாம்பழத்தை உண்ணலாம்.

அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒருவகை சட்னி, பழ ஊறுகாய், ஜாம் ஆகியவையும் தயாரிக்கப்படுகிறது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply