மாசில்லாத கண்ணாடி போன்ற சருமம் பெற வேண்டுமா

Loading...

மாசில்லாத கண்ணாடி போன்ற சருமம் பெற வேண்டுமா

சர்க்கரை ஸ்க்ரப் :

கடைகளில் கவர்ச்சியான கண்ட கண்ட ஸ்க்ரப் ஆர்வமா வாங்கி போட்டு , அதன் பக்க விளைவுகளால் முகம் வீங்கி, சருமம் பாதிக்கப்பட்டு என எத்தனையோ பிரச்சனைகளை நம்மில் நிறைய பேர் சந்தித்திருப்பார்கள். இனி இதற்காகவெல்லாம் அலட்டிக்கத் தேவையில்லை. மிகவும் எளிதாக சர்க்கைரையிலேயே ஸ்க்ரப் செய்யலாம்.

இது எந்த விதமான பக்க விளைவையும் ஏற்படுத்தாது. எண்ணெயும் சர்க்கரையும் கலந்த இந்த கலவை சருமத்தினுள் ஆழமாக ஊடிருவி செல்கிறது.மேலும் சருமத்தில் இருக்கும் நிறைய துவாரங்களை சுருங்கச் செய்து,சுருக்கங்களை போக்குகிறது.அழுக்குகளை நீக்கி சுத்தமாக்குகிறது.

சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தினை தருகிறது. வறண்டு போவதை தடுக்கிறது. அதுமட்டுமில்லாமல் தோலிலுள்ள கொலாஜின் உற்பத்தியை அதிகரிக்கக் செய்கிறது . ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது .இதனால் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றதை பெற முடியும்.எவ்வாறு சர்க்கரை ஸ்க்ரப் செய்வது?தேவையானவை :

சர்க்கரை
ஆலிவ் எண்ணெய்
ஆரஞ்சு ஆப்பிள் போன்ற விருப்பமான ஒரு essential oil (விருப்பமான )செய்முறை :

முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு கப் சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் மூன்றில் ஒரு பங்கு ஆலிவ் எண்ணெயை கலந்து கொள்ளவும்
பின் அதில் 10 சொட்டுக்கள் விருப்பமான வாசனை எண்ணெய் (essential oil)விட வேண்டும்.
கலவையை நன்கு கலக்கவும்.
ஒரு ஜாரில் போட்டு வைக்கவும்.
தேவையான போது உபயோகப்படுத்திக் கொள்ளவும்.உபயோகப்படுத்தும் முறை :

இந்த கலவை சிறிதளவு எடுத்து முகத்தில், கண்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் போடவும்.
பிறகு மெதுவாக மேல் நோக்கி மசாஜ் செய்யவும்.
ஒரு ஈரத்துணிக் கொண்டு முகத்தினை மேல் நோக்கி துடைக்கவும்.
இதனை 15 நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம்.டிப்ஸ்

உங்களிடம் எஸென்ஷியல் எண்ணெய் இல்லையென்றால் எலுமிச்சை சாறு உபயோகப்படுத்தலாம்.
ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய், பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply